தமிழகத்தில் இன்று
லாபம் இருந்தால் முதலீடு...ஐ.டி.பி.ஐ. வங்கி முடிவு
கல்கத்தா:
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி, இனி அதிக லாபம் கிடைக்கும் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஒட்டுமொத்த லாபத்தைக் கருத்தில் கொண்டு இம் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது தவிர, திட்டங்கள் அல்லாத துறைகளிலும் அதாவது தொழில் ஆலோசனை சேவை, அன்னியச் செலாவணி சேவை போன்றவற்றிலும் தனது பணியைவிரிவுபடுத்த ஐ.டி.பி.ஐ. வங்கி முடிவு செய்துள்ளது.
இருப்பினும் மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் கடன் தொடர்ந்து வழங்கப்படும்.
நடப்பு ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அம் முயற்சியில் தனதுபங்காக மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி முடிவு செய்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் திட்டங்களான தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்குதல்,ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றிலும் தனது பங்கைச் செலுத்த வங்கி திட்டமிட்டுள்ளது.
1999-2000-ம் ஆண்டில் ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு ரூ.947 கோடிதான் லாபம் கிடைத்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட ரூ.312 கோடி குறைவாகும்.லாபம் கிடைக்காத மூலதனங்களில் முதலீடு செய்ததால் லாபம் குறைந்துவிட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாபம் குறைந்துவிட்டாலும், தனது புதிய திட்டங்களை வங்கி செயல்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications