தமிழகத்தில் இன்று
மனைவியை சித்ரவதை செய்த இன்ஸ்பெக்டருக்குக் "காப்பு
சென்னை:
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவியை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிக் கூறப்படுவதாவது:
சென்னை, பரங்கிமலை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் பெருமாள் (48). இவர் மேற்கு அண்ணா நகரில் வசித்துவருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி லட்சுமி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
இன்ஸ்பெக்டருக்கும் அதே காலனியில் வசித்து வந்த விதவைப் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தினமும் விதவைப் பெண் வீட்டிலேயேஇரவைக் கழித்தார் பெருமாள்.
இரவு வீட்டுக்கு வராதது பற்றி மனைவி கேட்டதற்கு இரவுப் பணி என்று கூறி வந்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, கணவருக்கும் விதவைப்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை பாப்பாத்தி லட்சுமி தெரிந்து கொண்டார்.
அன்று முதல் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு இருந்து வந்தது. ஆனால் அதன் பிறகு விதவைப் பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தொடர்ந்தார்பெருமாள்.
பணி முடிந்து வீட்டுக்கு வரும் பெருமாள் சிறிது நேரம் இருந்துவிட்டு, இரவானதும் விதவைப் பெண் வீட்டுக்குச் சென்றுவிடுவார்.
விதவைப் பெண்ணுக்குக் கொடுப்பதற்காக மனைவியிடம் நகைகளைக் கேட்டு வாங்கிச் சென்றார். இதனால், ஆத்திரமடைந்த பாப்பாத்தி லட்சுமி,கணவருட் சண்டை போட்டார்.
இதனால் கோபமுற்ற பெருமாள், வீட்டில் தனி அறையில் பாப்பாத்தியைப் பூட்டி வைத்து உதைத்தார். மாதக் கணக்கில் நடந்த இச் சித்ரவதையைத்தாங்கிக் கொள்ளாமல் கணவன் மீது திருமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார் பாப்பாத்தி.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், இன்ஸ்பெக்டர் பெருமாளைக் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications