தமிழகத்தில் இன்று
கடனை அடைப்போம் வாருங்கள்.. நடிகர்களை அழைக்கிறார் விஜயகாந்த்
சென்னை:
நடிகர் சங்கக் கடனை அடைக்க உடனடியாக ரூ. 5 லட்சமும், இனிமேல் நடிக்கப்போகும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு லட்ச ரூபாய் வீதம் வழங்கப் போவதாகபதவியேற்பு விழாவில் அறிவித்தார் நடிகர் விஜயகாந்த்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் புதிய தலைவராக நடிகர்விஜயகாந்த், செயலாளராக சரத்குமார், துணைத் தலைவர்களாக நெப்போலியன்,எஸ்.எஸ்.சந்திரன், தமிழ்ச்செல்வி, பொருளாளராக காளை உள்ளிட்ட விஜயகாந்த்அணியினர் அமோக வெற்றி பெற்றனர்.
சென்னையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் புதன் கிழமை இவர்கள் அனைவரும்பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பேசிய விஜயகாந்த் கூறுகையில், இதேபோல்ஒவ்வொரு நடிகரும் சங்கக் கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும்.ஒவ்வொருத்தரும் உதவி செய்தால் தான் கடனை அடைக்க முடியும். நமக்குள்இனிமேல் பாகுபாடு கூடாது என்றார்.
விழாவில் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களை தவிர முன்னணிநடிகர்களான ரஜினி, கமல், இளம் நடிகர்களான அஜீத், விஜய், பிரபுதேவா உள்ளிட்டயாரும் கலந்து கொள்ளவில்லை. அதிலும் நடிகைகளில் பெரும்பாலோர் வரவில்லை.செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட குஷ்பு, மனோரமா, ராதிகா,ரேவதியை தவிர வேறு யாரும் வரவில்லை.
இதுகுறித்து விஜயகாந்த் மிகவும் வருத்தம் தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்குவரும்படி பலருக்கு அழைப்பிதழ் அனுப்பியும் வராதது வருத்தமளிக்கிறது என்றார்.
பதவியேற்றதும் முதல்வர் கருணாநிதி, மூத்த நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோரைசந்தித்து வாழ்த்துப் பெற்றார் விஜயகாந்த்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications