தமிழகத்தில் இன்று
ஊழலில் சிக்கித்தவிக்கும் கேரள கல்வித்துறை
திருவனந்தபுரம்:
கல்வியில் பிறமாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் கேரளாவில், கல்வித்துறையில் தற்போது அரசியல்நுழைந்துள்ளது.
கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகள், குளறுபடிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளைஏற்படுத்தியுள்ளன. கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை களையும்நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, பொது நுழைவுத்தேர்வு குறித்து வெளியிடப்பட்ட மாணவர்களின் ரேங்க் பட்டியல், பள்ளிகளில்பி.யூ.சி.வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான அனுமதி போன்றவற்றில் நடந்துள்ள முறைகேடுகளைச் சொல்லலாம்.
கேரளாவில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இந்த வருடம் பி.யூ.சி.வகுப்புகள் ஆரம்பிப்பதற்குஅனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தன. அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 9 பேர் கொண்ட குழுவை அரசுஅமைத்தது. அக்குழுவினரின் பரிந்துரைப்படி 360 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
ஆனால் பி.யூ.சி.வகுப்புகள் ஆரம்பிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்ட 360 பள்ளிகளில் சில பள்ளிகளில் இருந்துஅரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது. சில பள்ளி நிர்வாகத்தினர் ரூ. ஒருகோடி வரை வரை லஞ்சம் கொடுத்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து இப்பிரச்சனை கேரளஉயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
உயர்நீதிமன்றம் இப்பிரச்சனை குறித்து விவாதித்த பின் 9 பேர் கொண்ட தேர்வுக்குழுவினரிடம் பி.யூ.சி.வகுப்புகள்ஆரம்பிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகள் பட்டியலை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது. புதிதாகத் தேர்வு செய்யப்படும் பள்ளிகள் குறித்த விபரத்தை ஜூலை 26 ம் தேதிக்குள்வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், ஊழல்கள் காரணமாக கல்வி அமைச்சர்ஜோசப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், கேரள கல்வித்துறையில்கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் முறைகேடுகள் நீதிமன்றத்தின் தலையீட்டால் முடிவடையப்போவதில்லை. கல்வித்துறையில் அரசியல் புகுந்துவிட்டதால் இப்பிரச்சனையை அவ்வளவு எளிதில் தீர்த்து விடமுடியாது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications