தமிழகத்தில் இன்று
பாடம் படிக்க வந்த நல்ல பாம்பு
சென்னை:
பள்ளி மாணவியின் புத்தக பையில் புகுந்த நல்ல பாம்பு, பையை திறந்த போது படம்எடுத்து ஆடியது.
இப்படியொரு பரபரப்பு சம்பவம் பண்ருட்டி அருகில் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகள் தமிழ்ச்செல்வி. புதுப்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 10ம்வகுப்பு படிக்கிறாள்.
பஸ்சில் பள்ளிக்கு செல்வது தமிழ்ச்செல்வியின் வழக்கம். சம்பவத்தன்றுவாணியம்பாளையம் மெயின் ரோட்டில் பஸ்சுக்காக புத்தகப் பையுடன் காத்திருந்தார்.சாலை ஓரத்தில் புத்தக பையை வைத்து விட்டு சக மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது, நல்ல பாம்பு ஒன்று, தமிழ்ச் செல்வியின் புத்தக பைக்குள் புகுந்துகொண்டது.
பஸ்சுக்காக காத்திருந்த மாணவிக்கு தாகம் எடுக்கவே, புத்தக பையை திறந்து தண்ணீர்பாட்டிலை எடுத்தார். தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் பாட்டிலை பைக்குள் வைக்கமுயன்றபோது, படம் எடுத்த நிலையில் இருந்த பாம்பு சீறியது.
பாம்பு பாம்பு என்று அலறிய மாணவி, பையை கீழே வீசி விட்டு ஓடினார். அந்த நேரம்பார்த்து அவர் பள்ளி செல்ல வேண்டிய பஸ் வந்து நின்றது. புத்தகப்பையில் இருந்துவேகமாக வெளியேறிய பாம்பு, பஸ்சின் டயர் மீது ஏறி, டயர்களுக்கு நடுவில் உள்ளமையப்பகுதியில் ஜம்மென்று ஒளிந்து கொண்டது.
பஸ்சை நிறுத்திய டிரைவருடன், பாம்பை பார்ப்பதற்காக பயணிகளும் இறங்கினர்.இரண்டு டயர்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருந்த பாம்பை அடிப்பதற்காக சிலர்முயன்றனர். ஆனால், அந்த கிராமத்து மக்களோ நல்ல பாம்பை அடிக்கக் கூடாது என்றுதடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே இதுதொடர்பாக சர்ச்சை வலுத்தது. பார்த்தார்கண்டக்டர். அருகிலிருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து ஒரு கரும்பை எடுத்து வந்து,பாம்பை கலைத்தார். கரும்பின் மீது பாம்பு தொற்றிக் கொண்டது. அதை அப்படியேதூக்கி கரும்புக் காட்டுக்குள் எறிந்தார். பஸ் புறப்பட்டது.
ஆனால், பாம்பை கண்ட மாணவி மட்டும் பயத்தில் பித்து பிடித்தது போல் இருந்தார்.அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விபூதி அடித்தனர் பெரியவர்கள்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications