தமிழகத்தில் இன்று
அப்துல் கலாமுக்கு ராமானுஜர் விருது
சென்னை :
அணு விஞ்ஞானி அப்துல்கலாமுக்கு ராமானுஜர் விருது சென்னையில் முதல்வர் கருணாநிதியால் வழங்கப்படுகிறது.
சென்னையில் 1996-ம் ஆண்டு ஆழ்வார்கள் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. இதனுடைய தலைவர் ஆர்.எம்.வீரப்பன். நிறுவன செயலாளர்எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆண்டு தோறும் இந்த மையம் சார்பாக ராமானுஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.
விருது பெறுவோருக்கு ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளிக் கேடயமும் வழங்கப்படும். 1999-ம் ஆண்டு ஜூலையில் பாராளுமன்ற தேர்தல்நடந்ததால் அப்பொழுது இந்த விருது வழங்கப்படவில்லை. எனவே இப்பொழுது 1999, 2000 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் விருதுகள் பெறுவோர் பட்டியல்அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விருது பெறுவோர் பட்டியலை புதன்கிழமை நிருபர்களிடம் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டார். ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் விருது வழங்கும் விழாஆகஸ்டு மாதம் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநதி தலைமை தாங்கி விருதுகளை வழங்குகிறார்.
1999-ம் ஆண்டுக்கான ராமானுஜர் விருது புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாமுக்கும், அண்ணா விருது டாக்டர் கா.செல்லப்பனுக்கும், கலைஞர் விருதுகணபதி ஸ்தபதிக்கும், எம்.ஜி.ஆர் விருது வலம்புரி ஜானுக்கும் வழங்கப்படும்.
2000- ம் ஆண்டுக்கான ராமானுஜர் விருது பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கும், அண்ணாவிருது எழுத்தாளர் பகீரதனுக்கும், கலைஞர் விருது எழுத்தாளர்வள்ளிக்கண்ணனுக்கும், எம்.ஜி.ஆர் விருது பிரேமா நந்தகுமாருக்கும் வழங்கப்படுகிறது என்று ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications