தமிழகத்தில் இன்று
ஏழை நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா
கோவை:
மற்றவர்களுக்கு (மாநிலங்களுக்கு) வாரி, வாரி வழங்கினாலும், நாங்கள் என்னவோ ஏழைகள்தான் என நிதியமைச்சகத்தையே ஏழைஅமைச்சகமாக மாற்றியுள்ளார் இந்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா.
அண்மையில் ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க. நடத்திய தமிழக எழுச்சி மாநாட்டில் யஷ்வந்த் சின்காவின் சிக்கன நடவடிக்கை அவரது கட்சியினரையே திகைப்பில்ஆழ்த்தி விட்டது.
தனி விமானத்தில் பயணம் செய்யும் அதிகாரம் பெற்றிருந்தாலும் சாதாரண பயணிகள் விமானத்திலேயே வந்திறங்கினார் சின்கா. அதுவும்,வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் இல்லாமல் சாதாரண மக்கள் பயணம் செய்யும் எகானமி வகுப்பு பயணத்தையேமேற்கொண்டுள்ளார். அதுவும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் வழக்கமான நேரத்தில் வந்திறங்கினார்.
அடுத்து,
கோவையில் மத்திய நிதியமைச்சர் தங்குவதற்கும், பேசுவதற்கும் கோவையில் உள்ள பெரிய ஓட்டலான ஓட்டல் ரெசிடன்சியில் அறை ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டை ( இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்) இந்திய தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் சின்காவோ இந்த ஓட்டலில் தங்க மறுத்து அரசு விருந்தினர் மாளிகையில் (சர்க்யூட் ஹவுஸ்) ரூ 10 வாடகையிலேயே தங்கினார்.
(அதே சமயம், அங்கிருந்த ஹைடெக் முதல்வர் ரெசிடென்சியில் தங்கி, ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம்)
காலை உணவையும் சர்க்யூட் ஹவுசிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்துவிட்டு சேம்பர் ஆப் காமர்ஸ் கூட்டடத்திற்கு சென்றுபேசினார். இங்கு பேசி முடிந்ததும் நேராக, பி,எஸ்,ஜி., கல்லூரிக்குச் சென்று பேசினார். பின்னர் புறப்பட்டு ம.தி.மு..க. நடத்தும் தமிழக எழுச்சி மாநாட்டில்கலந்து கொள்ள ஈரோடு சென்றார்.
வழியில் ஒரே இடத்தில், பெருந்துறையில் கட்சிக் கொடியை ஏற்றி விட்டுச் சென்றார். (இந்தப் பயண நிகழ்ச்சியின் இடையில் டீ, காபி, சாப்பாடு சாப்பிடக் கூடநேரம் இல்லையாம்). ஈரோட்டில் முதல்வர் கருணாநிதியோடு மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது. உடன் வந்த பா.ஜ.கட்சியைச் சேர்ந்த முக்கியபிரமுகர், வைகோவிடம் நிதியமைச்சரின் பசியைச் சொல்ல , வைகோ அதிர்ச்சியடைந்தார்.
இரவு 10 மணிக்கு மேல் ஆகியிருந்ததால் நிதியமைச்சரை சிறப்பாக கவனிக்க முடியாதே என கவலைப்பட்டுள்ளார் வைகோ. ஆனாலும், சாம்பார்சாதம், தயிர் சாதம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையில் சாப்பிட்டுவிட்டு இரவே கோவைதிரும்பினார். மீண்டும் சர்க்யூட் ஹவுசில் தங்கினார்.
அப்போது, நிதியமைச்சர் ஏன் ரெசிடென்சியில் தங்க மறுக்கிறார் என் ஆவல் மிகுதி கொண்ட பா.ஜ.,மாநில வர்த்தக அணித் தலைவர் சேகர் அதைசின்காவிடமே கேட்டுள்ளார். அதற்கு யஷ்வந்த் சின்கா, எனது நிதியமைச்சத்தின் மீது நானே சுமையை ஏற்ற விரும்பவில்லை. எனவே. எப்போதும், நான்இந்தியாவில் எங்கு சென்றாலும் (சர்க்யூட் ஹவுஸ்) அரசு விருந்தினர் மாளிகையிலேயே தங்குவேன்.
ஒரு முறை பெங்களூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட அனுபவம் கசப்பானது. அங்கு குழாயில் தண்ணீர் வரவில்லை. எலித்தொல்லை இருந்தது. இதிலும் ஒரு நாள் தங்கினேன். பிறகு அரசுக்குச் சொந்தமான அசோக ஓட்டலில் தங்கினேன்.
மாநிலங்களுக்கு பணத்தை வாரி, வாரி வழங்கினாலும் எனது அமைச்சகம் என்னவோ ஏழைதான்,பட்ஜெட் பற்றாக்குறையை 3 சதவீதமாககுறைப்பது எப்படி என்பதுதான் என் கவலை எல்லாம் என்றாராம் சின்கா.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications