தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஆயுதங்களை ஒப்படைத்தனர் பிஜி புரட்சிக்காரர்கள்

சுவா:

இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர செளதிரி மற்றும் 17 பிணைக் கைதிகளை விடுவித்துள்ள நிலையில்,புரட்சிக்காரர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்தனர்.

தங்கள் வசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் வெள்ளிக்கிழமை மாலைக்குள் ஒப்படைப்பதாக அவர்கள்ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், 56 நாட்களுக்குப்பின் பிரதமர்மகேந்திர பால் செளத்ரியும், அவரது அமைச்சரவை சகாக்களும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புரட்சிக்காரர்கள் தாங்கள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்க முடிவுசெய்திருந்தனர். அதன்படி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில், புரட்சிக்காரர்கள் பாராளுமன்றவளாகத்தில் நடந்த பொதுமன்னிப்பு நிகழச்சியில் 60 தானியங்கி ஆயுதங்கள், 14 கைத்துப்பாக்கிகள்,கண்ணிவெடிகள், முகமூடிகள் ஆகியவற்றை ஒப்படைத்தனர்.

இந்த ஆயுதங்கள் அனைத்தையும் ராணுவ கிட்டங்கியிலிருந்து திருடி உபயோகப்படுத்தினர். பொது மன்னிப்புவழங்கும் நிகழ்ச்சியில் பிஜி தீவின் பூர்வ குடி தலைவர்கள் கலந்துகொண்டனர் என்றார் நாடா.

முன்னதாக கடந்த மே 19 ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் பிரதமர் செளத்ரி உள்படஅமைச்சர்கள், எம்.பிக்களை புரட்சி மூலம் சிறை பிடித்தனர். பின்னர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.ராணுவத்திற்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் முதலில் 9 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை மகேந்திர பால் செளத்ரியும், பிற அமைச்சர்களும்விடுவிக்கப்பட்டனர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+