தமிழகத்தில் இன்று
சர்ச் குண்டுவெடிப்புக்களுக்கு முஸ்லீம்களைக் குறை கூற முடியாது
பெங்களூர்:
பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் நடந்த சர்ச் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம்களைக் குற்றம் சாட்ட முடியாது என்று கிறிஸ்தவ அமைப்புகள் கூறியுள்ளன.
பெங்களூர் ஜெகஜீவன்ராம் நகர் செயின்ட் பீட்டர் பால் சர்ச் மற்றும் ஹூப்ளி வாடி நகரிலுள்ள சர்ச்சிலும் சமீபத்தில் குண்டுகள் வெடித்தன. பெங்களூர்மாகடிசாலையில் சென்றுகொண்டிருந்த வேனில் குண்டுவெடித்ததில் குண்டுகளை எடுத்துச் சென்ற 2 பேர் இறந்தனர். இப்ராஹிம் என்பவர் படுகாயமடைந்துசிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீந்தார் அஞ்சுமான் என்ற தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்புக்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் மட்டும் இதற்குப் பின்னணியில் முஸ்லீம்கள் இருப்பதாகக்கூறமுடியாது என்று பெங்களூரைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புக்கள் கூறியுள்ளன.
அகில இந்திய கிறிஸ்தவ கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் தயாள் கூறுகையில், கர்நாடகம், கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவஆலயங்களில் குண்டுவெடித்தது. பெங்களூரில் ஜெகஜீவன்ராம்நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பால் சர்ச்சிலும் குண்டுவெடித்தது. இதற்குப் பின்னணியில் தீந்தார்ஆஞ்சுமான் என்ற முஸ்லீம் அமைப்பினர்தான் காரணம் என்று சிலர் கூறி வருகிறார்கள்.
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்தும் விதத்தில் இவ்வாறு கூறுகின்றனர். தேவாலயங்களில் நடக்கும் குண்டுவெடிப்புச்சம்பவத்திற்கும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சாரங்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரமத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.
சிபிஐ விசாரணை தேவையில்லை- கர்நாடக முதல்வர்: இதற்கிடையே கர்நாடகத்தில் ஹூப்ளி, குல்பர்கா, மற்றும் பெங்களூர் கிறிஸ்தவ தேவாலயங்களில்குண்டுவெடித்தது குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை. ஏற்கன புலனாய்வுத்துறை போலீசார் (சிஓடி) விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குஇக்குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக சில முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளன.
இச்சம்பவத்திற்குப் பின்னணியில் சங்க்பரிவார் அமைப்பு காரணமாக இருக்குமா என்பது குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது. பாகிஸ்தான்உளவுத்துறையின் (ஐ.எஸ்.ஐ)நாசவேலையாக இருக்கக் கூடுமா என்பது குறித்தும் இப்போது எதுவும் கூறமுடியாது என்றார்.
பெங்களூர் ஆர்ச் பிஷப் இக்னேஷியஸ் பின்டோ கூறுகையில், குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை இன்னும் முடியவில்லை. முடிந்தபின்தான்என்னால் எந்தக் கருத்தையும் கூற முடியும்.
இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம், ஜெயின், சீக்கிய மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விட்டு நாட்டின் மதஒற்றுமையைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
டெய்லி பாஸ்பான் பத்திரிக்கை ஆசிரியர் உபயதுல்லா ஷெரீஃப் கூறுகையில் தீந்தார் அஞ்சுமான் முதலில் முஸ்லீம் அமைப்பே இல்லை. இந்தச் சம்பவத்திற்குப்பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும், தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்க வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications