தமிழகத்தில் இன்று
"காவிரிப் பிரச்சினைக்கு ஆணையம் தீர்வல்ல
சென்னை:
காவிரி நதிநீர் ஆணையத்தை விட்டு தமிழகம் வெளியேறி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றுகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மணிசங்கர் அய்யர்வலியுறுத்தியுள்ளார்.
காவிரிடெல்டா பகுதிகள் அடங்கிய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில்டெல்லியில் நடந்து முடிந்த காவிரி ஆணையக் கூட்டம் பற்றி மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டி வருமாறு:
காவிரிப் பிரச்னை தொடர்பாக 1998ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வாஜ்பாய் - கருணாநிதிக்கு இடையேஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு மேட்டூர் அணைக்கு அட்டவணைப்படி உரிய அளவு தண்ணீர் வரவேஇல்லை.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும்பட்சத்தில் காவிரி நதி நீர் ஆணையத்தில் தமிழகம் நீடிக்க வேண்டும்என்பதில் அர்த்தமே இல்லை.
6 டி.எம்.சி.யா அல்லது 19 டி.எம்.சி.யா என்பதல்ல பிரச்னை. நாம் ஒன்றும் பிச்சைக்காரர்கள்அல்ல. கர்நாடகாவின் கருணையை நம்பி இருப்பதற்கு.
காவிரி டிரிபியூனல் தமிழகம் தண்ணீர் பெற வேண்டிய உரிமையை நிலை நாட்டியுள்ளது. அதன்படிகர்நாடகாவிடம் தண்ணீர் பெறுவதற்கு உரிமை உள்ளது. டிரிபியூனலின் இடைக்கால உத்தரவுப்படி தண்ணீர்பெறுவதை விட்டு விட்டு கர்நாடகாவிடம் கருணை காட்டுங்கள் என்று கேட்பது வெடகக்கேடு.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் சம்பந்தப்பட்ட இந்த பிரச்னையில் முதல்வர் கருணாநிதிதொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நீதிமன்றத்தின் மூலமே நியாயம் கிடைக்க முடியும். எனவேகாவிரி ஆணையத்தில் இருந்து தமிழகம் உடனடியாக வெளியேற வேண்டும். உச்சநீதிமன்றத்தில்விசாரணையில் இருக்கும் கர்நாடகம் - தமிழகம் இடையிலான காவிரி நதி நீர்ப் பிரச்னை பற்றியவழக்கை சந்திக்க வேண்டும்.
அவ்வழக்கை உடனடியாக விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும்படி கோர வேண்டும் என்றார் மணிசங்கர்அய்யர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications