தமிழகத்தில் இன்று
நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற பிஜி புரட்சிக்காரர்கள் மறுப்பு
வெலிங்க்டன்:
பிஜியில், நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புரட்சிக்காரர்கள் வெளியேற மறுத்ததையடுத்து அங்கு தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
பிஜியில் புரட்சிக்காரர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட அனைத்துப் பிணைக் கைதிகளும்விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில், பிரதமர் செனியா கராசே தலைமையிலான புதிய அரசு திங்கள்கிழமை பதவியேற்பதாக இருந்தது. இதில்இரண்டு இந்தியர்களும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய ஜனாதிபதியாக இலெய்லோ பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியஅமைச்சரவையில் இந்தியர்கள் இடம்பெற்றால் மீண்டும் பெருங்கலவரம் வெடிக்கும் என்று புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு ஏற்கனவேஎச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது நாடாளுமன்ற வளாகத்தை விட்டு புரட்சிக்காரர்கள் வெளியேற மறுத்துள்ளனர். இதனால், புதிய அரசுபதவியேற்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவ வீரர்கள் சுட்டதில் இறந்த புரட்சிக்காரரின்இறுதிச் சடங்கு முடிந்த பின், வியாழக்கிழமைதான் நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுவோம் என்றார்.
இதற்கிடையே, தலைநகர் சுவாவில் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications