கீதையின் பாதையில்...
சொத்துத் தகராறில் அண்ணன் குடும்பத்தைக் கொன்ற போலீஸ்காரர்
தேனி:
மதுரை அருகே, தேனியில் சொத்துத் தகராறு காரணமாக அண்ணன் குடும்பத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் அதிரடிப் படை போலீஸ்காரர்.
தேனி அருகே வாழையாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (30). இவர் அதிரடிப் பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார்.
இவரது அண்ணன் ராஜபாண்டியன் (35). அண்ணன், தம்பி இருவரும் வாழையத்துப்பட்டியில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். சகோதரர்கள் இருவரும்அண்மையில் நிலம் ஒன்றை வாங்கினார்கள். நிலத்திற்கான சொத்துப்பத்திரத்தை அண்ணன் ராஜபாண்டியன் தன் பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
இதனால் அண்ணன், தம்பி இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இவர்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டனர்.உறவினர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் சவுந்தரபாண்டியனின் ஆத்திரம் தீரவில்லை. சனிக்கிழமை வேலைமுடிந்து வரும்போது துப்பாக்கியையும் கொண்டு வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தன் அண்ணன் ராஜபாண்டியன் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தார். அங்கே தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் ராஜபாண்டியனைதூக்கத்திலேயே சுட்டார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு அங்கு வந்த அவரது அண்ணி அமிர்தமணி (30), மகன்கள் கார்த்திக் (9), விஜிகுமார் (11)ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டார். இதில், விஜி குமார் தவிர மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விஜிகுமார் குண்டுகாயத்துடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆவேசம் தணிந்த சவுந்தரபாண்டியன் துப்பாக்கியுடன் போலீசில் சரணடைந்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications