தமிழகத்தில் இன்று
ரூ. 1.25 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை:
கம்ப்யூட்டர் மூலம் போலி ஆவணங்களைத் தயாரித்து ரெடிமேட் ஆடைதயாரிப்பாளர்களிடம் ரூ. 1.25 கோடி அளவுக்கு மோசடி செய்த கணவர், மனைவிஉள்பட நான்கு பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் பால வெங்கடேஷ். இவர் லென்னாக்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையைச் சேர்ந்த பல ரெடிமேட் ஆடைதயாரிப்பு நிறுவனங்களை அணுகிய, வெங்கடேஷ், அமெரிக்காவிலுள்ள "ரஸ்டிக்ரிவர் என்ற நிறுவனத்திலிருந்து சலுகை விலையில் ரெடிமேட் ஆடைக்கானபொருட்களை வாங்கித் தருவதாக கூறி ஆர்டர் பெற்றுள்ளார்.
இதை நம்பிய பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வெங்கடேஷிடம் ரூ. 1.25 கோடிமதிப்புள்ள ஆர்டர்களைக் கொடுத்துள்ளனர். பணத்துடன் அமெரிக்கா சென்றவெங்கடேஷ், அங்குள்ள செவோன் ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனத்திற்குச் சென்றுள்ளார்.பிறகு அவர்களிடமிருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளர். அவற்றைசென்னைக்குக் கொண்டு வந்து கம்ப்யூட்டர் உதவியுடன் ரஸ்டிக் ரிவர் நிறுவன ஆர்டர்போல மாற்றியுள்ளார்.
போலி ஆர்டர்களை, பணம் வாங்கிய சென்னை நிறுவனங்களிடம் கொடுத்துள்ளார்.ஆர்டரில் கூறியுள்ளபடி பொருட்கள் வராத நிறுவன உரிமையாளர்கள், அமெரிக்கநிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போதுதான் மோசடி தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. பால வெங்கடேஷ் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்ததாக, வெங்கடேஷின்மனைவி சந்தனா, பி.ஆர்.பிரகாஷ் குமார், சதீஷ் குமார் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
மே 29-ம் தேதி வரை வெங்கடேஷ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருநதார்.தற்போது சனிக்கிழமை அவரை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications