தமிழகத்தில் இன்று
கேபிள் டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு தர வி.எஸ்.என்.எல். திட்டம்
சென்னை:
கேபிள் டி.வி. மூலம் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட்(வி.எஸ்.என்.எல்.) இயக்குநர் குப்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவரும் வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் பரமேஸ்வரனும் சென்னையில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமைஅளித்த பேட்டி:
தொலைத் தூரத் தொலைபேசி சேவையை (எஸ்.டி.டி வசதி) தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மக்களுக்கு எளிதிலும்,விரைவாகவும் எஸ்.டி.டி. வசதியை ஏற்படுத்தித் தரும் சேவையில் வி.எஸ்.என்.எல். நிறுவனம் ஈடுபடவுள்ளது.
கேபிள் டி.வி. மூலம் இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தித் தரவும் திட்டமிட்டுள்ளோம். அதற்காக கேபிள் டிவி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைநடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளுடனான தொலைபேசி தொடர்புக்காக (ஐ.எஸ்.டி.) கடல் வழியே கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வி.எஸ்.என்.எல். நிறுவன விரிவாக்கத் திட்டத்துக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.மீதமுள்ள மூவாயிரம் கோடிக்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனியார் தொலைக் காட்சிகள் நிறுவனங்கள் எங்களது நிலையத்தில் இருந்தே செய்திகளை ஒளிபரப்புவதற்கான ஸ்டுடியோக்களை ஏற்படுத்திக் கொள்ள வசதிசெய்து தரப்படும்.
வி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்போது 5 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். அதற்கேற்ப நிறுவனத்தின் செயல் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளதுஎன்றனர் அவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications