தமிழகத்தில் இன்று
ஸ்டீவர்ட் சிறப்பான ஆட்டம்: ஜிம்பாப்வேயைத் தோற்கடித்தது இங்கிலாந்து
பர்மிங்ஹாம்:
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள்கிரிக்கெட் போட்டித் தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில்இங்கிலாந்து 52 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயைத் தோற்கடித்தது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. முன்னாள் கேப்டனும் விக்கெட்கீப்பருமான அலெக் ஸ்டீவர்ட் சிறப்பாக ஆடி அவுட்டாகாமல் 101 ரன்கள் எடுத்தார்.
அவருக்கு அடுத்து தோர்பே 33 ரன்களும், கேப்டன் ஹுசைன் 34 ரன்களும் எடுத்தனர்.ஜிம்பாப்வே அணியில் ஸ்ட்ரீக் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன் 2 விக்கெட்டுகளையும்வீழ்த்தினர்.
அடுத்து ஆடி ஜிம்பாப்வே அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 210ரன்களையே எடுக்க முடிந்தது. இதையடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துவெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியில் கேம்ப்பெல் 60 ரன்களும், ஜான்சன் 52 ரன்களும் ஸ்ட்ரீக் 45ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இங்கிலாந்துஅணி தரப்பில் ஒயிட் 3 விக்கெட்டுகளையும் ஹிக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பேட்டிங்கில் சதமடித்தது மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் செய்தபோது 4கேட்சுகளைப் பிடித்து அணியை வெற்றி பெற வைத்த ஸ்டீவர்ட் ஆட்ட நாயகராகத்தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளும் ஏற்கெனவே இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில்,செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகவே இருந்தது.
சனிக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இப் போட்டித் தொடரில் மூன்றாவதுஅணியாகக் கலந்து கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்தது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications