தமிழகத்தில் இன்று
சி.டி.பி.டி.யில் கையெழுத்திடாத வரை இந்தியா மீது பொருளாதாரத் தடை நீடிக்கும் - ஜப்பான்
டோக்கியோ:
அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதானபொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்படாது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை நடத்தின. இச்சோதனைக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீது ஜப்பான் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
அதாவது இனிமேல் இரு நாடுகளுக்கும் புதிதாக கடன் கொடுப்பதில்லை என்று ஜப்பான் அறிவித்துவிட்டது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் ஜப்பான் பிரதமர் இந்தியா வரவுள்ளார். அப்போது இந்தியாவுக்கும்ஜப்பானுக்கும் இடையேயான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்தியா மீதான ஜப்பானின் பொருளாதாரத் தடைகளும் அப்போது விலக்கிக் கொள்ளப்படலாம் என்றுகூறப்படுகிறது.
இந் நிலையில், அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தத்தில் (சி.டி.பி.டி.) இந்தியாவும், பாகிஸ்தானும்கையெழுத்திடாதவரை அந் நாடுகள் மீதான பொருளாதாரத் தடை ஒருபோதும் விலக்கிக் கொள்ளப்படாது என்றுஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி யுதாகா ஐமுரா தெரிவித்துள்ளார்.
சிடிபிடியில் கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதுடன் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்புதிய கடன்களும் வழங்கப்படும் என்றார் அவர்.
இந் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ளவேண்டும்என்று ஜப்பானின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதாரத் தடைகளால் இருநாடுகளுடனான வர்த்தகம் தடைபட்டுவிட்டதாக அவை கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications