தமிழகத்தில் இன்று
பந்துவீச்சில் முழு கவனம் செலுத்தியதால் ரன்கள் குவிக்க முடியவில்லை - அனில் கும்ப்ளே
டெல்லி:
பந்து வீச்சில் முழு கவனத்தையும் செலுத்தியதால் டெஸ் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட்அணியின் சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
பி.பி.சி.க்கு அவர் அளித்த பேட்டி:
இந்திய அணியில் முக்கிய சுழற் பந்து வீச்சாளராகவே நான் கருதப்படுகிறேன். அந்தநம்பிக்கைக்கு ஏற்ப நான் எனது பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.அதனால்தான் பேட்டிங்கில் நான் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை.
இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடிக்க எனக்கு வாய்ப்புக்கள்கிடைத்தன. இரு முறை சதம் அடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால்,துரதிருஷ்டவசமாக நான் ரன் அவுட் ஆகிவிட்டேன். எதிர்காலத்தில் நான் நிச்சயம்டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியஇரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகஉள்ளது.
முதலில் அந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பில்தான்நான் பந்து வீசினேன். அதன்படி 10-வது விக்கெட்டை வீழ்த்தியவுடன் இந்திய அணிவெற்றி பெற்றுவிட்டது என்றுதான் கருதினேன். அணியின் மற்ற வீரர்கள் வந்துஎன்னைப் பாராட்டிய போதுதான் நான் சாதனை படைத்ததை உணர்ந்தேன்.
நான் இச் சாதனையைப் படைக்க உதவிய இந்திய அணியினருக்கு எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அப்போது இந்திய அணியின் கேப்டனாகஇருந்த அசாருதீனுக்கு நன்றி. ஏனெனில் மறு முனையில் பந்து வீசிக்கொண்டிருந்தவர்களிடம் விக்கெட் எடுக்கும் நோக்கில் பந்து வீச வேண்டாம் என்றும்,நான் சாதனை படைக்க உதவும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதன்படி ஸ்ரீநாத்தும், பிரசாத்தும் எதிர் முனையில் பந்து வீசினர். கடைசி பாகிஸ்தான்வீரர் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த விக்கெட்டை எனக்குக் கிடைக்கும்என்று நினைத்து பந்துவீசினேன். விக்கெட் கிடைத்து சாதனையும் படைத்தேன்.
இந்திய அணிக்கு தற்போது ஏற்பட்டுள்ள பின்னடையவு தாற்காலிகமானதுதான்.இந்திய வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள்தான். விரைவில் இந்திய அணி பலவெற்றிகளைப் பெறும் என்றார் கும்ப்ளே.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications