தமிழகத்தில் இன்று
ஹோட்டல் அறையில் காதலியுடன் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
மாமல்லபுரம்:
சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டோ பிரபு, தனதுகாதலியுடன் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
ஆன்டோ பிரபுவும், சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த சம்யுக்தாவும் (25) நீண்டநாட்களாகக் காதலித்து வந்தனர். இந் நிலையில், 10 நாள் லீவு போட்டுவிட்டுகாதலியுடன் மாமல்லபுரத்துக்கு திங்கள்கிழமை வந்தார் ஆன்டோ பிரபு.
கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் ரூம் எடுத்தனர். கொண்டுவந்த பொருட்களை அறையில் வைத்துவிட்டு இருவரும் கடற்கரைக்குச் சென்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை கண்டு களித்துவிட்டு மாலையில் அறைக்குத்திரும்பினர். செவ்வாய்க்கிழமை காலை அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவுதிறக்கப்படவில்லை.
டீ எடுத்துக் கொண்டு காலை மணிக்கு அறைக்கு வந்த ஹோட்டல் ஊழியர் அறைக்கதவைத் தட்டினார். வெகு நேரம் கதவு திறக்கப்படாததை அடுத்து மாமல்லபுரம்போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது.
சிறிது நேரத்தில் ஹோட்டலுக்கு வந்த போலீஸார், அறைக் கதவை உடைத்து உள்ளேசென்றனர். அங்கு, ஆன்டோ பிரபுவும் சம்யுக்தாவும் மின் விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து மாமல்லபுரம்போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications