தமிழகத்தில் இன்று
கபில், அஸார், ஜடேஜா, சித்து வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து கபில்தேவ், அஸாருதீன்,ஜடேஜா, சித்து, மோங்கியா ஆகிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட்சூதாட்டக்காரர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் திடீர்சோதனை மேற்கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள்கூறப்பட்டன. முதன் முதலில் இத்தகைய குற்றச்சாட்டுகளை இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் கூறினார்.
பிரபாகரின் குற்றச்சாட்டுகளை அடுத்து மேட்ச் பிக்ஸிங் குறித்து சிபிஐ விசாரணைக்குமத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது இது குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகவிசாரித்து வந்தனர்.
இந் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனக்கு ரூ,25 லட்சம்கொடுக்க முன் வந்ததாகப் பிரபாகர் கூறினார். அதற்கு ஆதாரமாக சில வீரர்களின்பெயரையும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பெரியவிவகாரமாயின. சிபிஐ தனது விசாரணையை முடிக்கி விட்டுள்ளது.
இந் நிலையில், மேட்ச் பிக்ஸிங் சம்பவத்தில் முக்கிய திருப்பமாக முக்கிய கிரிக்கெட்வீரர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர்சோதனை மேற்கொண்டது.
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கபில்தேவ், அசாருதீன், அஜய் ஜடேஜா,சித்து, மோங்கியா ஆகியோரது வீடுகளிலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மற்றும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள்ஆகியோரது வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையின் சோதனைமேற்கொண்டனர்.
காலை 8.30 மணிக்கே சோதனை தொடங்கிவிட்டதாகக் கூறிய வருமான வரித்துறைஉயர் அதிகாரி ஒருவர், சோதனை நடத்தப்படும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைத்தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், 5 கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் சோதனைநடத்தப்படுவதை அவர் ஒப்புக் கொண்டார்.
டெல்லியில் உள்ள கபில்தேவ், ஜடேஜா, நிகில் சோப்ரா, அஜய் சர்மா ஆகியோரதுவீடுகளிலும், ஹைதராபாத் மற்றும் மும்பையில் உள்ள அசாருதீனின் வீடுகளிலும்,பாடியாலாவில் உள்ள சித்துவின வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர, அகமதாபாத்தில் உள்ள சில கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வீடுகளிலும்சோதனை நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மும்பையில் உள்ள சுனில் கவாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக வந்தசெய்தியை அவர்கள் மறுத்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications