தமிழகத்தில் இன்று
மான் கறி சாப்பிட்ட 4 போலீஸார் மீது வழக்குப்பதிவு
சென்னை:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மான் கறி விவகாரம் தொடர்பாக 4 போலீஸார் மீது வனப் பாதுகாப்புச் சட்டப்படி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியில் கடந்த மாதம் கலவரம் ஏற்பட்டது.பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
வ.புதுப்பட்டி மலையடிவாரத்தில் அமைந்த ஊர் என்பதால் மலையில் இருந்து மான்கள் மற்றும் சில விலங்குகள்ஊருக்குள் வந்து தண்ணீர் குடித்துச் செல்லும்.
கடந்த மாதம் 15-ம் தேதி மாலை சிவகாசியில் இருந்து ஒரு ஜீப்பில் சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்தஇன்ஸ்பெக்டர் ராமசாமி, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி, போலீஸ்காரர் அனந்தசாமி, டிரைவர் செல்லத்துரைஆகியோர் வ. புதுப்பட்டி நோக்கிச் சென்றனர்.
கிருஷ்ணன்கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜீப் மோதி புள்ளிமான் குட்டி ஒன்று அடிபட்டு இறந்தது.அதிர்ச்சியடைந்த போலீஸார் யாருக்கும் தெரியாமல் மான் குட்டியை ஜீப்பில் தூக்கிப் போட்டுக் கொண்டு தாங்கள்தங்கியிருந்த முகாமுக்குச் சென்றனர்.
அங்கு மான் கறி சமைத்துச் சாப்பிட்டனர். மான் கறி விருந்து பற்றி யாருக்கும் தெரியாது என்று போலீஸார்நினைத்திருந்தனர். ஆனால், மொட்டைக் கடிதம் மூலம் மான் கறி விவகாரம் வெளியானதும் வனத் துறைஅதிகாரிகள் குழு வ.புதுப்பட்டிக்கு சென்று விசாரணையில் இறங்கியது.
மான் கறி சாப்பிட்டத்தை முதலில் மறுத்த போலீஸார் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டனர். தலை, தோல்பகுதிகளை புதைத்து வைத்திருந்த இடத்தையும் காட்டினர். அவை, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவத்தை அடுத்து மான் கறி சாப்பிட்ட 4 போலீஸார் மீதும் தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications