தமிழகத்தில் இன்று
ஜெ.யின் பங்களாக்களில் ரூ. 2 கோடிக்கு மின்சாதனப் பொருட்கள்
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் மட்டும் ரூ.1.05 கோடி மதிப்புள்ள ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனப்பொருட்கள் இருந்தன என்று தனி நீதிமன்றத்தில் பொதுப் பணித் துறை அதிகாரி சாட்சியம் அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ் வழக்கு விசாரணையில் பொதுப்பணித் துறை அதிகாரி திருத்துவராஜ் வியாழக்கிழமை அளித்த சாட்சியம்:
பொதுப் பணித் துறையில் மதிப்பீட்டுப் பிரிவில் நான் பணியாற்றுகிறேன். ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் தோட்ட வீடு மற்றும்பையனூர், சிறுதாவூர் பங்களாக்களில் உள்ள எலக்ட்ரிக்கல் பொருட்களையும், சாதனங்களையும் மதிப்பீடு செய்யும் பணி எனக்குத் தரப்பட்டது.
அதன்படி நான் இந்த வீடுகளுக்கு சென்று மதிப்பீடு செய்து அறிக்கை அளித்தேன். சென்னை போயஸ் தோட்ட வீட்டில் மட்டும் லிப்ட், ஏ.சி. உள்ளிட்ட 1கோடியே 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் உபயோகப் பொருட்கள் இருந்தன.
அதேபோல் பையனூர் பங்களாவில் 37 லட்சத்து 13 ஆயிரத்து 184 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. சிறுதாவூரில் உள்ள பண்ணை வீட்டில் 17 லட்சத்து50 ஆயிரம் மதிப்புள்ள மின் உபயோகப் பொருட்கள் இருந்தன.
கிண்டியில் உள்ள நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் 47 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன என்றார்திருத்துவராஜ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications