தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பால் தாக்கரே கைது? மும்பையில் பதற்றம்

மும்பை:

சிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரே கைது செய்யப்படுவார் என்ற வதந்தியை அடுத்து மும்பையில்தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இதையடுத்து மும்பை மாநகரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

1992-ம் ஆண்டு மும்பையில் இந்து-முஸ்லிம் மதக்கலவரம் ஏற்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கானோர்கொல்லப்பட்டனர்.

கலவரம் பற்ற தனது பத்திரிக்கையில் பால்தாக்கரே தலையங்கம் எழுதினார். இந்தத் தலையங்கம் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருந்ததாக, கலவரம் பற்றி விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம்சாட்டியது.

ஆனால் அப்போது மகாராஷ்டிராவில் சிவசேனை-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்ததால் தாக்கரே மீது எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது அங்கு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதையடுத்து, மதக்கலவரத்தைத் தூண்டும்வகையில் தலையங்கம் எழுதிய பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராஷ்டிர அரசுஉத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்த உத்தரவை அடுத்து மும்பை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் சிவசேனைத் தொண்டர்க்வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பால் தாக்கரே வியாழக்கிழமை கைது செய்யப்படலாம் என்ற வதந்தியால்பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கும்படி இதுவரை அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லைஎன்று மும்பை போலீஸ் கமிஷனர் எம்.என்.சிங் கூறினார்.

பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிய அரசு உத்தரவிட்டதை அடுத்து மத்திய அமைச்சர்களாகஉள்ள 3 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் கொடுத்த ராஜிநாமாகடிதத்தை ஏற்க பிரதமர் வாஜ்பாய் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+