தமிழகத்தில் இன்று
பாட்னாவிலேயே தகனம் செய்யப்பட்ட சென்னை அதிகாரியின் உடல்
சென்னை:
பாட்னா விமான விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ராமச்சந்திரனின் உடல் பாட்னாவிலேயே தகனம்செய்யப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அல்லையன்ஸ் ஏர்லைன்ஸின் விமானம் சில நாட்களுக்கு முன்பு பாட்னா விமான நிலையம் அருகேவிபத்துக்குள்ளானது. இதில் 60-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.
இவ் விபத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உயிரிழந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகவேலை பார்த்து வந்தார்.
ராமச்சந்திரன் இறந்த தகவல் கிடைத்ததும் அவரது மனைவி உமா, சகோதரர்கள் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், உறவினர்கள் ஜெயராமன்,மகாலட்சுமி ஆகியோர் பாட்னா சென்றனர். ராமச்சந்திரன் உடலை பாட்னாவிலேயே தகனம் செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து ராமச்சந்திரனின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் விமானம் மூலம்சென்னை திரும்பினர்.
விபத்தில் பலியான அதிகாரி ராமச்சந்திரனுக்கு விக்னேஷ் என்ற 5 வயது மகன் இருக்கிறான்.
மற்றொரு அதிகாரி உடல் சென்னை வந்தது
பாட்னா விமான விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி ஜெயகுமாரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. விமானநிலையத்தில் அவரது உடலுக்கு அவர் பணியாற்றி நிறுவனத்தின் ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அசோக் நகரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு ஜெயகுமாரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications