தமிழகத்தில் இன்று
மேற்காசிய அமைதிப் பேச்சில் இழுபறி - இறுதி முயற்சியில் தலைவர்கள்
துர்மாண்ட் (அமெரிக்கா):
மேற்காசிய அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த தீர்வும் காணப்படவில்லை.இருப்பினும், எப்படியும் இறுதி முடிவு காணும் முயற்சியில் தலைவர்கள்ஈடுபட்டுள்ளனர்.
மேற்காசியப் பகுதியில் உள்ள ஜெருசலம் பகுதி தொடர்பாக இஸ்ரேலுக்கும்,பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அமெரிக்காவில் உள்ள கேம்ப் டேவிட் என்ற இடத்தில் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் யுத் பாராக் மற்றும் பாலஸ்தான தலைவர்யாசர் அராபத்துக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும்காணப்படவில்லை. இத் தகவலை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜோ லாக்ஹார்ட் தெரிவித்தார்.
இருப்பினும், இப் பிரச்சினையில் இறுதி முடிவு காணும் முயற்சியில் தலைவர்கள்தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கேம்ப் டேவிட்டில் பாரக்குக்கும், அராபத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகுறித்தும் பேச்சுவார்த்தையின் இறுதி நிலவரம் குறித்தும் மத்திய கிழக்குப் பகுதியில்உள்ள 5 நாடுகளின் தலைவர்களை பில் கிளின்டன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கினார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான பிரச்சினை தொடர்பாகநடைபெற்று வரும் மேற்காசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வுகாணப்படவேண்டும் என்று மத்திய கிழக்கு நாடுகள் ஆவலாக உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவேண்டும் என்ற நோக்கில் ஜப்பானில்நடைபெறும் ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை ஒரு நாள் தள்ளிவைத்துவிட்டுபுதன்கிழமையும் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் அமெரிக்கஅதிபர் பில் கிளின்டன்.
இஸ்ரேல் பிரதமர் பாரக், பாலஸ்தீன தலைவர் அராபத் இருவருடனுன் தனித்தனயேகிளின்டன் பேச்சு நடத்தினார். இருப்பினும் இப் பிரச்சினையில் தீர்வு ஏதும்காணப்படவில்லை.
இப் பிரச்சினையில் எப்படியாவது இறுதி முடிவு காண இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும்அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக லாக்ஹார்ட்தெரிவித்தார். பாரக்கும், அராபத்தும் இன்னும் அமெரிக்காவில்தான் உள்ளனர் என்றார்அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications