தமிழகத்தில் இன்று
நீங்கள் ஒரு கட்சியை ஆரம்பியுங்கள். நான் ஆதரவு தருகிறேன் என்று ரஜினிகாந்த் கூறினால், நீங்கள்கட்சி ஆரம்பிப்பீர்களா?
ப: மாட்டேன். அவர் பெயரைக் கெடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை.
கே: பா.ஜ.க. அரசை நிலை குலைக்கவே சர்ச்சுகள் மீது தாக்குதல் நடக்கின்றன என்று தலைவர் குஷாபாவ்தாக்கரே சந்தேகம் தெரிவித்திருப்பது பற்றி...?
ப: அவர் கூறியதில் நியாயம் இருக்கிறது என்று காட்டும் வகையில், கர்நாடக மாநில நிகழ்ச்சிகள் பற்றிய போலீஸ்விசாரணை முடிவுகள் அமைந்திருக்கின்றனவே.
கே: விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்ற இலங்கை அதிபர்சந்திரிகா கூறியுள்ளது பற்றி...?
ப: புத்திசாலித்தனமான நிலைப்பாடு, என்ன சொன்னாலும் புலிகள் பேச வரப்போவதில்லை: வந்தாலும் பேச்சுவார்த்தையை கெடுக்காமல் இருக்கப் போவதில்லை. அப்படியிருக்க, நிபந்தனையின்றி பேசலாம் வாருங்கள் என்றுஅவர்களை அழைத்து விட்டால் - பொறுப்பு அவர்கள் மீது விழுகிறது. அவர்களோ பொறுப்பற்றவர்கள்.ஆகையால் சந்திரிகா மீது பழி இருக்காது. சந்திரிகா சாமர்த்தியமாகச் செயல்பட்டிருக்கிறார்.
கே: கட்சிகள் தேய்வதும், வளர்வதும் காலத்தைப் பொறுத்தது என்கிறாரே வலது கம்யூனிஸ்ட் செயலாளர்நல்லக்கண்ணு. இது குறித்து...?
ப: அது மற்ற கட்சிகளுக்கு. கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரையில் மெதுவாகத் தேய்வதும், வேகமாக தேய்வதும்,காலத்தைப் பொறுத்தது.
கே: பீகார் அமைச்சர் லலித் குமார் யாதவ், லாரி டிரைவர் மற்றும் கிளீனரை அடைத்து வைத்து சித்ரவதைசெய்தது பற்றி...?
ப: சரியான காட்டுமிராண்டித்தனம். இப்படிப்ப்டவர்கள் எல்லாம் மந்திரிகள் ஆக முடிகிறதே - அதுதான் இந்நாட்டுஜனநாயகத்தின் இன்றைய லட்சணம்.
கே; குப்பனும், சுப்பனும் மோதிக் கொண்டால் அதில் காட்டுகிற அக்கறையை விட, சுப்பனும்,சூசையும்மோதிக் கொள்ளும் போது இந்த அரசு அதிக அக்கறை காட்டும் என்று முதல்வர் கருணாநிதிஅளித்துள்ள விளக்கம் பற்றி...?
ப: குப்பனும்,சுப்பனும் மோதுகிற நிகழ்ச்சிகள் பல, தொடர்ந்து நடப்பதற்குத் காரணம் இப்போது புரிகிறது.
கே: நான்கு மந்திரிகள் தரும் கட்சியுடன்தான் கூட்டணி என்கிறாரே தமிழகக் காங்கிரஸ் தலைவர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?
ப: அசட்டுப் பிடிவாதம். நான்கு காங்கிரஸ்காரர்கள் ஜெயித்து எம்.எல்.ஏ.க்கள் ஆன பிறகு. பேச வேண்டிய பேச்சுஇது.
கே: பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபட்டால் லஞ்சம்- ஊழல் குறைய வாய்ப்புகள்உள்ளனவா?
ப: தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் இந்த கேள்வியைக் கேட்பது ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது.
கே: இன்றைய காஷ்மீர் குழப்பத்திற்கு மூல காரணமே நேருதான் என்று பா.ஜ.க, தமிழகச் செயலாளர்கூறியுள்ளாரே?
ப: உண்மைதான். சர்தார் பட்டேல் எடுத்த நிலை சரியானது. ஆனால் அது எடுபடவில்லை. நேருவின் முடிவேஇறுதியானதாக அமைந்தது. அதன் விளைவுகளை அன்று தொடங்கி இன்றுவரை அனுபவித்து வருகிறோம்.
கே: 1967-க்குப் பிறகு ஓரளவுக்கு நேர்மையாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில், ம.தி.மு.க.,பா.ம.க., த.மா.க. அளவுக்குக் கூட வளர்ச்சியடையாமல் உள்ளதற்கு என்ன காரணம்?
ப: சில நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்பழுக்குச் சொல்ல முடியாதவர்களாக இருப்பார்கள்.ஆனால் அயலான் வாழ்ந்தால் பொறுக்க மாட்டார்கள். அந்த மாதிரி நேர்மைதான் கம்யூனிஸ்ட் கட்சியின் நேர்மை.அதனால்தான் வளர்ச்சியின்மை.
கே: பஞ்சாப் மாநிலத்திற்கும் சுயாட்சி வழங்கக் கோரி, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும்என்று அகாலிதளம் கட்சி கூறியுள்ளது பற்றி...?
ப: இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
5.7.2000 தேதி துக்ளக் இதழில், ... காஷ்மீருக்கு இந்த மாதிரி சுயாட்சி அறிவிக்கப்பட்டால், தமிழ்நாட்டில் மீண்டும்சுயாட்சி தத்துவம் புதுப்பிக்கப்படும். பஞ்சாபிலும், இந்த விஷமம் ஆரம்பிக்கும். அதன் பிறகு வேறு சிலமாநிலங்களுக்கும் இது பரவுவது எதிர்பார்க்கக் கூடியதே.
மிகவும் பலவீனமான ஒரு மத்திய அரசு உருவாவதற்கு இது வழி வகுக்கும். நாடு பல துண்டுகளாக்கப் படுவதற்கும்,இது முதல் படியாக அமையும். ஆகையால் ஆரம்பத்திலேயே ஃபரூக் அப்துல்லாவின் யோசனையை நசுக்கிவிடுவதுதான் நல்லது என்று எழுதியிருந்ததை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்












Click it and Unblock the Notifications