தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

முதல் பக்கத் தொடர்ச்சி

நமக்கு இந்தியாவில் மதக் கலவரங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச அரங்குகளில்இந்தியாவை தர்ம சங்கடத்திற்குள்ளாக்க வேண்டும் என்பதற்காகவும், பாகிஸ்தானிய ஏஜெண்டுகள் செய்துள்ளவேலையாக இது இருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே எந்தவித ஆதாரமும் இல்லாமல், இது ஹிந்து மத வெறியர்கள் செய்த அராஜகம் என்று சிலகட்சிகள் கூறுவது ஏற்கத் தக்கதல்ல. இம் மாதிரி நிகழச்சி நடக்கிற போது, அரசு தீவிரமாக முனைந்துகுற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.

இதைச் செய்யவில்லை என்றால், பா.ஜ.க. அரசு வந்ததிலிருந்துதான் இம்மாதிரி தாக்குதல்கள் அடிக்கடி நிகழஆரம்பித்து விட்டன: அரசு நம்மை ஒன்றும் செய்யாது என்ற தைரியம் இந்தத் தாக்குதல்களை நடத்துபவர்களுக்குஇருக்கிறது என்ற குற்றச்சாட்டு நியாயம் பெற்று விடும்.

அதாவது ஹிந்து அமைப்புகள்தான் இந்தத் தாக்குதல்களை நடத்தின என்றும் நாம் சொல்லவில்லை - அதேசமயத்தில் அம்மாதிரி அமைப்புகள் இதை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் நமக்கு இருந்திருக்கிறது.

அந்த சந்தேகம் தவறானது என்பதும், மற்ற சில சக்திகள் மீது நாம் கொண்ட சந்தேகம்தான் சரியானது என்றும்இப்போது தெளிவாகிறது.

நமது நிலை இதுவென்றால், வேறு பல முக்கியமான தேசிய பத்திரிக்கைகள் இந்த நிகழ்ச்சிகளுக்காக ஹிந்துஅமைப்புகள் மீதே குற்றம் சாட்டின. தலையங்கங்களை எழுதின.

இப்போது ஹிந்து அமைப்புகளுக்கும், இந்த நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகிய பிறகு.அப்பத்திரிக்கைகள் தங்களுடைய முந்தைய கருத்துக்களுக்கு கொஞ்சமும் வருத்தம் தெரிவிக்கவில்லை. இதுநியாயமல்ல.

பத்திரிக்கைகள்தான் இப்படியென்றால், கர்நாடக, ஆந்திர நிகழ்ச்சிகள், தொடர்பாக சில ஹிந்து அமைப்புகளின்மீது குற்றம் சுமத்திய கிறிஸ்துவ மிஷனரிகளும், தங்களுடைய கூற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.

போப் அவர்களே கவலை தெரிவிக்கும் அளவுக்கு ஹிந்து அமைப்புகள் மீது குற்றம் சாட்டியவர்கள், இப்போதுமெளனத்தைக் கடைப்பிடிப்பது தர்மம் அல்ல.

இவர்களும் சரி - நாம் உட்பட, பொதுவாகவே அனைத்து மக்களும் சரி - எந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்ச்சிக்கும்,எந்த ஒரு சாரார் மீதும், உடனடியாகக் குற்றம் சுமத்தி விடுவது சற்றும் நல்லதல்ல என்பதைப் புரிந்து கொள்ள இந்தவிவகாரம் உதவினாலே போதும்.

குறிப்பாக மதத் தலைவர்களும், முக்கியமான பத்திரிக்கைகளும் ஓர் அசம்பாவிதம் நடக்கும்போதுஉணர்ச்சிவசப்பட்டு, இது இந்த மதத்தினர் செய்த வேலை என்று தீர்மானமாகக் கூறி விடுவதால் கசப்புணர்வுதான்வளரும். மத நல்லிணக்கத்திற்கு அது நல்லதல்ல.

இவற்றையெல்லாம் கூறுகிற அதே சமயத்தில், நாம் ஒன்றைத் தெளிவாக்க விரும்புகிறோம்.

சில ஹிந்து அமைப்புகளின் அணுகுமுறைகள் சரியானவை அல்ல: அவை பகைமையைத் தூண்டி விடக் கூடியவை:அந்த இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சம்பந்தப்படும். சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன.

ஆனால் எந்த அராஜகம் நிகழ்ந்தாலும், உடனே அவற்றுக்கு ஹிந்து அமைப்புகள்தான் பொறுப்பு என்று சொல்லிவிடுவது பொறுப்புள்ளவர்கள் செய்யக் கூடிய காரியம் அல்ல.

சொல்லப் போனால், இம்மாதிரி பொறுப்பற்ற அவசரக் குற்றச்சாட்டுகள் நேர் எதிரான விளைவுகளைத்தான்தோற்றுவிக்கும்.

ஹிந்து அமைப்புகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்தான் என்ற நினைப்பைத்தான் இதுஏற்படுத்தும்.

எதனால் இந்த மாதிரி அவசரக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பா.ஜ.க.வின் கை இந்திய அரசியலில் ஓங்கி வருவதை விரும்பாத பல சக்திகள் இருக்கின்றன.

ஹிந்து அமைப்புகள் பலவற்றோடு பா.ஜ.க.வுக்குத் தொடர்பு உண்டு என்பதால், அந்த அமைப்புகளைகுற்றாவாளிக் கூண்டில் நிறுத்தி, அதன் மூலம் பா.ஜ.க.வை வீழ்த்தி விட முடியும் என்று இந்த சக்திகள் நம்புகின்றன.

அதனால்தான் மைனாரிட்டி மதங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு வில்லங்கம் ஏற்பட்டால், உடனேஅதற்கான பழி இந்த இயக்கங்கள் மீது சுமத்தப்பட்டு விடுகிறது. அதாவது, இது அரசியல். இதன் மூலம் பாழாவதுமத ஒற்றுமை. அது பற்றி இந்த சக்திகளுக்கு கவலையில்லை.

ஆனால் மக்களாகிய நாம் இதைப் புரிந்து கொண்டு, இம்மாதிரி ரெடிமேட் குற்றச்சாட்டுகள் வினியோகம்செய்யப்படும்போது, அவற்றை எச்சரிக்கை உணர்வோடு அணுக வேண்டும். தேவை நிதானம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+