தமிழகத்தில் இன்று
கலவரமாக மாறிய கல்லூரி மாணவர்களின் சாலை மறியல்
சென்னை:
கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் திடீரென்று கலவரமாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டமாணவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தப்பட்டது.
இது பற்றி கூறப்படுவதாவது:
சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தி.நகரில் உள்ள துணிக்கடைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றனர். அங்கு வந்த பெண்களிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.
அது குறித்து கடை உரிமையாளரிடம் பெண்கள் புகார் கூறினர். கடை உரிமையாளரின் எச்சரிக்கையையும் மீறிமாணவர்கள் மீண்டும் தகராறு செய்தனர்.
இதையடுத்து அவர்களை கடை ஊழியர்கள் அடித்து வெளியே அனுப்பிவிட்டனர். அடிபட்ட மாணவர்கள்கல்லூரிக்கு வந்து தாங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கூறியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்து கடற்கரைச் சாலையில்மறியலில் ஈடுபட்டனர். துணிக் கடை உரிமையாளரைக் கைது செய்யவேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடற்கரைச் சாலையில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் கமிஷனர் பெ. காளிமுத்து உள்பட உயர் போலீஸ்அதிகாரிகள் வந்து மாணவர்களிடம் பேசினார்.
துணிக் கடை அதிபரைக் கைது செய்வதாகக் கூறிய அவர் கலைந்து செல்லும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து மாணவர்களுக்கும், போலீஸாருக்கும்இடையே வாக்குவாதம் முற்றியது.
மாணவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். கலைந்து ஓடிய மாணவர்கள் பஸ்கள் மற்றும் பிறவாகனங்கள் மீது கல்வீசித் தாக்கினர். புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களைமாணவர்கள் தாக்கினர்.
இதையடுத்து மாணவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இச் சம்பவம் தொடர்பாக சிலமாணவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications