தமிழகத்தில் இன்று
அரசியலில் நுழைகிறார் ரணதுங்கா?
கொழும்பு:
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, அரசியலில் நுழைய யோசித்துவருகிறார்.
தனது தலைமையின் கீழ் 1996-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கைக்கு பெற்றுத் தந்த சாதனையாளரான அர்ஜுன ரணதுங்காகிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணி தான் விளையாடிய முதல் மற்றும் 100-வது டெஸ்டுகளில் தானும் விளையாடி சாதனை படைத்துள்ளவர் அர்ஜுன ரணதுங்கா.
தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்ட அவர் அடுத்து அரசியலில் நுழைவார் என்று ஆரூடம் கூறப்படுகிறது. ஏனெனில்,அவருக்கு நல்ல அரசியல் பின்னணி உள்ளது.
அவரது தந்தை ரெக்கி ரணதுங்கா, இலங்கை துறைமுகத் துறை துணை அமைச்சராக உள்ளார். ஒரு சகோதரர் பிரசன்னா மேற்கு மாகாண கவுன்சிலில்ஆளும் கட்சி உறுப்பினராக உள்ளார்.
ஆக வலுவான அரசியல் பின்னணியைக் கொண்டுள்ள அர்ஜுன ரணதுங்கா அரசியல் ஈடுபட தீவிர யோசனையில் இருப்பதாக அவருக்கு நெருங்கியவட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆண்டு இறுதியில் இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் முடிவில்தான் சர்வதேச கிரிக்கெட்போட்டியிலிருந்து விலக அர்ஜுன ரணதுங்கா முடிவு செய்தததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அர்ஜுன ரணதுங்காவை இலங்கை மக்களுக்கு நன்றாகத் தெரியும். அரசியல்வாதியாக வந்தால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இது தொடர்பாகபல்வேறு அரசியல் கட்சிகள் அவரைத் தொடர்பு கொண்டன. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புவதாக அர்ஜுன ரணதுங்காவின்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, எங்கள் கட்சியில் சேர அர்ஜுன ரணதுங்கா முடிவு செய்தால் அதை நாங்கள் இரு கை நீட்டி வரவேற்போம் என்று சிங்கள் உருமயா கட்சித்தலைவர் திலக் கருணரத்னே கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications