தமிழகத்தில் இன்று
அமைதிப் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார் விக்ரமசிங்கே
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே வெளிநடப்பு செய்தார்.இதனால், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 17 ஆண்டுகளாக சண்டை நடைபெற்றுவருகிறது.
இச் சண்டைக்கு முடிவு கண்டு இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு புதிய அரசியல் சட்டத் திருத்தத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கொண்டுவந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத் திருத்தம் குறித்து தமிழர் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தையும் கேட்கஅதிபர் சந்திரிகா விரும்பினார்.
அதன்படி தமிழர் கட்சிகள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினார். முதலில் தமிழர்கட்சிகளுடன் பேச்சு நடத்திய பிறகு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுடன் பேச்சு நடத்தினார்.
ஆனால், பேச்சுவார்த்தை துவங்கிய சிறிது நேரத்தில் கூட்டத்தை விட்டு ரனில் விக்ரசிங்கே வெளியேறினார்.
சிங்கப்பூரில் சில நாட்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவருடன் ரனில் விக்ரசிங்கே பேச்சு நடத்தியதாக நடத்தியதாகபத்திரிக்கைகளில் செய்தி வெளியாகின.
இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, எனக்கு எதிராக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தஅமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது நியாயமாக இருக்காது என்று கூறி கூட்டத்தை ரனில் விக்ரமசிங்கே புறக்கணித்தார்.
எப்போது விசாரணை முடிகிறதோ அதற்குப் பிறகே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே சந்திரிகாவுடன் பேச்சு நடத்திய தமிழர் கட்சிகளில் சில புதிய அரசியல் சட்டத் திருத்ததுக்கு ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இதையடுத்து இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சந்திரிகா மேற்கொண்டுள்ள முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications