தமிழகத்தில் இன்று
"அலைபாயுதே படம் பார்த்து விட்டு வீட்டை விட்டு ஓடிய 12...14
சென்னை:
"அலைபாயுதே படத்தைப் பார்த்து விட்டு, ஒன்பதாவது வகுப்பு மாணவனும்,ஏழாவது வகுப்பு மாணவியும் வீட்டை விட்டு ஓடி, திருமணம் செய்ய இருந்தபோதுபோலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்த புரட்சிக் காதலர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். அடுத்தடுத்த வீட்டில்வசிப்பவர்கள் லட்சுமணனும், கிருஷ்ணமூர்த்தியும். லட்சுமணனின் 12 வயது மகள்லலிதா, ஏழாவது படிக்கிறாள். கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிக்கு வயது 14.ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.
நண்பர்களாக பழக வேண்டிய வயதில், தனிமையில் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம்இருந்ததால், எல்லை மீறி காதலர்களாக மாறினர். யாருக்கும் சந்தேகம் வராத வகையில்சந்திக்க வாய்ப்புகள் இருந்ததால், இருவர் மனதிலும் காதல் ஆழமாக வேரூன்றியது.
விளைவு, தனிமையில் நெருக்கத்தை தேட ஆரம்பித்து விட்டனர். அரசல்புரசலாக பேசஆரம்பித்த விஷயம் பெற்றோர்கள் கண்ணில் பட்டு விட, துடித்தனர். கடுமையாககண்டித்தனர். ஆனாலும், பள்ளி செல்லும் போர்வையில் தியேட்டரில் சந்தித்தனர்.
அப்படி பார்த்த படம் தான் அலைபாயுதே.படம் முடிந்து வெளியே வந்த இருவர்மனதிலும் ஒரே முடிவு. அலைபாயுதே கதாநாயகன் மாதவன், கதாநாயகி ஷாலினிபோல் பெற்றோரை துறந்து விட்டு திருமணம் செய்து கொண்டு, தனிக் குடித்தனம்நடத்தலாம் என்று தீர்மானித்தனர்.
அந்த திட்டப்படி இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வீட்டை விட்டு ஓடி விட்டனர்.நேராக தாம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து ஆவடிக்கு சென்றனர்.
ஆவடியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலைச் சுற்றிவலம் வந்தனர்.
இதற்கிடையில் பிள்ளைகளை காணவில்லை என்று தாம்பரம் போலீசில் பெற்றோர்கள்புகார் செய்தனர். போலீஸ் கன்ட்ரோல் ரூம் மூலம் தகவல் பறக்க, ரோந்துப் பணியில்இருந்து போலீசார் உஷாராகினர்.
ஆவடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த கோவிலை நோட்டமிட்டனர்.அப்போது இளம் காதலர்கள் இருவரும் கையில் மஞ்சள் கயிறு தாலியுடன் சுற்றிவருவதை பார்த்து, சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்ட இருவரையும் காவல் நிலையம்அழைத்து வந்து போலீசார், சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வயது பத்தாதஇருவருக்கும் புத்திமதி கூறி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications