தமிழகத்தில் இன்று
காணாமல் போன ஆயுதங்களைத் தேடும் முயற்சியில் பிஜி ராணுவம்
வெல்லிங்டன்:
பிஜியில் புரட்சிக்காரர்களால் ராணுவக் கிட்டங்கியிலிருந்து திருடிச் செல்லப்பட்ட ஆயுதங்கள் மற்றும்வெடிமருந்துகளைத் தேடும் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிஜி தீவில் கடந்த மே 19 ல் புரட்சிக்காரர்கள் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவரது அமைச்சரவையில்இருந்தவர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
பல்வேறு குழப்பங்களுக்குப் பின் ராணுவ ஆட்சியாளர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே சமரசஉடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ராணுவ கிட்டங்கியிலிருந்து புரட்சிக்காரர்கள் திருடிய ஆயுதங்கள்அனைத்தையும் அவர்கள் ராணுவத்திடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று முடிவானது.
ஆனால், திருடிய ஆயுதங்களில் சிலவற்றை மட்டுமே புரட்சிக்காரர்கள் ஒப்படைத்தனர். இதனால்அவர்களிடமிருந்து பிற ஆயுதங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
புரட்சிக்காரர்கள் ஆயுதங்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் ராணுவ வீரர்கள் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.
புரட்சிக்காரர்கள் டஜன் கணக்கில் துப்பாக்கிகள் மற்றும் பிஸ்டல்களை ராணுவத்திடம் ஒப்படைக்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர் என்று ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர்ஹோவர்டு பொலிடினி கூறுகையில், புரட்சிக்காரர்கள் கையில் வைத்துள்ள ஆயுதங்களை மீண்டும்அவர்களிடமிருந்து கைப்பற்றுவதே எங்களது இப்போதைய குறிக்கோள். ராணுவ வீரர்கள் பல குழுக்களாகபிரிக்கப்பட்டு ஆயுதங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இன்னொரு செய்தித்தொடர்பாளர் தாராகினிகினி கூறுகையில், புரட்சிக்காரர்களுக்கு இன்னும் பொதுமன்னிப்புவழங்கப்படவில்லை. அவர்கள் கைப்பற்றியுள்ள ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்தால்தான் பொதுமன்னிப்புவழங்கப்படும் என்றார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை புரட்சிக்காரர் ஒருவர் பிஜி நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் மீதுஇரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications