தமிழகத்தில் இன்று
பா.ஜ.க.வை கைவிட்டால் தி.மு.க.வுடன் உறவு என்கிறது த.மா.கா
கோவை:
பாரதிய ஜனதாவுடனான உறவை தி.மு.க. முறித்துக் கொண்டால், அதனுடன் கூட்டணிவைத்துக் கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் முடிவு செய்யும் என திருப்பூரில் த.மா.கா,பொதுச் செயலர் கார்வேந்தன் தெரிவித்தார்.
திருப்பூரில் ஜூலை 25-ம் தேதி நிருபர்களிடம் கார்வேந்தன் கூறியதாவது:
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் விவசாயிகளின் நலன்கள் பெரிதும்புறக்கணிக்கப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மட்டுமே பல்வேறு இடங்களில்அணைகள், குளங்கள், ஏரிகள் அமைக்கப்பட்டன. திராவிடக் கட்சிகளின் ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு நீர் நிலைத் திட்டங்கள்தோல்வியடைந்து விட்டன.
பொள்ளாச்சிப் பகுதியில் பரம்பிக்குளம் ஆழியாறு தண்ணீரில் முதல்வர் கருணாநிதிதுவக்கி வைக்க இருக்கும் ஒரு மடை விட்டு ஒரு மடைப் பாசனம் வெறும்கண்துடைப்பு.
40 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிற்கு இந்த முறைப் பாசனம், இடம் பெற வேண்டும்.ஆனால் வெறும் ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே இந்தப் பாசன வசதியைத் துவக்கிவைக்கவுள்ளார். இதே போன்று சென்னைக்கு போதுமான கிருஷ்ணா நதி நீரை, மாநிலஅரசால் கொண்டு வர இயலவில்லை.
பாரதிய ஜனதாக் கட்சியுடனான உறவை தி.மு.க. முறித்துக் கொண்டால் மட்டுமேதி.மு.க. வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வது பற்றி தேர்தல் சமயத்தில் முடிவு செய்வோம்.
ஜாதி அடிப்படையில் இயங்கும் எந்த அரசியல் கட்சியுடனும் த.மா.கா கூட்டணிவைத்துக் கொள்ளாது. மாவட்டந் தோறும் தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தியகூட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கப் போகிறோம்.
காஷ்மீர் சுயாட்சி விஷயத்தில், பாரதிய ஜனதா அரசு மேற்கொண்ட நடவடிக்கைபாராட்டுக்குரியது என அவர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications