தமிழகத்தில் இன்று
முஷாரப்பைக் கவிழ்க்க பெனாசிரை நாடுகிறார் நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முஷராப் தலைமையில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இணைந்து போராட முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவிற்கு, பதவியிழந்தபிரதமர் நவாஸ் ஷெரீப் தூது அனுப்பியுள்ளார்.
விமானக்கடத்தல், கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்,துபாயில் இருக்கும் பெனாசிர் பூட்டோவைச் சந்திக்க தூதரை அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் 1971 ல் ஏற்பட்டது போல் நெருக்கடியான சூழ்நிலை உருவாவதற்கு தெரிந்தோ, தெரியாமலோ தான் காரணமாகி விட்டதாக அவர்அதில் கூறியுள்ளார். தற்போது ராணுவத்தின் பிடியிலுள்ள பாகிஸ்தானை மீட்க வேண்டும். இதற்கு பெனாசிர் பூட்டோவின் கட்சியும், நவாஸ் ஷெரீபின்பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஷெரீப் கூறியுள்ளார்.
தேர்தலில் இணைந்து செயல்பட பெனாசிர் முன்வந்தால், முதல் நான்கு ஆண்டுகளுக்கு பெனாசிரே பிரதமராக இருக்கலாம். மேலும, தேர்தலில்பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, தனது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி வேட்பாளர்களை நிறுத்ததாது என்றும்ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க, நாடு முழுவதும் இரு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும். அதற்குத் தேவையானபணத்தைத் தர தயாராக இருப்பதாகவும் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications