தமிழகத்தில் இன்று
நடிகர் சங்கத்தின் தலைவரான விஜயகாந்த் பல தர்ம சங்கடமான சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு, முதல்வர்கருணாநிதியை சந்திப்பதற்காக சக நடிகர்கள், நடிகைகளை அழைத்துச்சென்றார்.
எல்லோரையும் அழைத்துச் செல்லலாம் என்றால் அம்மா கட்சிக்காரர்களான ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன் இருவரையும் எப்படி முதல்வர் முன்அழைத்துச் செல்லடியும் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.
கட்சி தாண்டி இருவரும் அவருக்கு நல்ல நண்பர்கள். சொன்னால் எப்படி எடுத்தக் கொள்வார்கள் என்கிற யோசனையும் அவரிடம் இருந்தது. இறுதியில்விஜயகாந்தின் தர்ம சங்கடத்தை உணர்ந்து கொண்ட ராதாரவியும், எஸ்.எஸ்.சந்திரனும் முதல்வரை சந்திக்காமல் தவிர்த்துவிட்டனர்.
ஒரு வழியாக கலைஞரிடம் தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்த விஜயகாந்த் அடுத்து அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவாஜி கணேசனை சந்திக்கசென்றார். அதிலும் சிக்கல். எல்லோரும் வரலாம் ஆனால் குஷ்பூ வருவதை மட்டும் சிவாஜி விரும்பவில்லை என்றார்கள் (குஷ்பு-பிரபு காதல்மறக்க முடிகிற விஷயமா?).
குஷ்பூவிடம் சொன்னால் வருத்தப்படுவாரே என்று யோசித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலையே படாத குஷ்புபிற நடிகர்களுடன் தைரியமாகவே சிவாஜி வீட்டுக்கு வந்தார். பிறரைப் போலவே தானும் சிவாஜியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டுச்சென்றுவிட்டார்.
இயக்குனர் இமயம், தயாரிப்பாளர் மோதல் !
அந்த தயாரிப்பாளர் தயாரித்த படங்கள் அனைத்துமே சக்ஸஸ். "க" அல்லது "கா"வில் தான் இவர் படங்களின் தலைப்புகள் இருக்கும் இருக்கும். இந்ததயாரிப்பாளர் தனக்கு இயக்குனர் இமயம் ஒரு படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
இருவரும் பேசினார்கள். இயக்குனரிடம் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் கொடுத்துவிட வேண்டும் படம் வெளியாகும் பொழுது , மதுரை ஏரியாவினியோக உரிமையையும் இயக்குனருக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் பேசப்பட்டதாம்.
இந்த படத்தில் "வெற்றிக்கொடிகட்டு" கருப்பு மச்சான் நடிகரும் இயக்குனரின் மகனும் நடிக்கிறார்கள். இயக்குனர் தன் மகனுக்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கிறார் என்று முனுமுனுக்க ஆரம்பித்து இருக்கிறார் கருப்பு நடிகர்.
இது ஒருபக்கம் என்றால். இந்த படத்தில் நடிப்பதற்காக, சீனியர் காமடி நடிகர் ஒருவர் நாகர்கோவில் அருகேயுள்ள முட்டம் துறைமுகம் வரைவந்துவிட்டு, சம்பளப் பிரச்சனை காரணமாக திரும்பி வந்துவிட்டாராம்.
இது தவிர, படத்தில் நடிக்கும் நடிக, நடிகைகளுக்கு இன்னும் அட்வான்ஸ் ஏதும் கொடுக்கவில்லை என்கிறார்கள்.
இப்போது தயாரிப்பாளரும், இயக்குனர் இமயமும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications