தமிழகத்தில் இன்று
ராம்ஜேட்மலானியை ராஜினாமா செய்யச் சொன்னது உண்மைதான் - வாஜ்பா
டெல்லி:
மத்திய சட்ட அமைச்சராக இருந்த ராம் ஜேத்மலானியை எனது தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னது உண்மைதான் என்றுபிரதமர் வாஜ்பாய் ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக மக்களவையில் தனது அறிக்கையை அவர் வெளியிட்டார்.
மக்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும் ராம் ஜேத்மலானி ராஜினாமா விவகாரத்தைக் காங்கிரஸ் கட்சி எழுப்பியது. இவ் விவகாரம் குறித்துபிரதமர் அறிக்கை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர்.
ராம் ஜேத்மலானி ராஜிமானா விவகாரம் முக்கியமான ஒன்றுதான். இது குறித்து அறிக்கை வெளியிடும்படி பிரதமர் வாஜ்பாயியிடம் கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் கேள்வி நேரம் நடைபெற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் கூறினர்.
அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கைவிட்டதை அடுத்து அவையில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.கேள்வி நேரம் முடிந்தது பிரதமர் வாஜ்பாய் அறிக்கை வெளியிட்டார்.
எனக்கு எதிராக பின்னப்பட்ட காரணங்களின் அடிப்படையில்தான் பிரதமர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எனது பதவியைப் பறித்துவிட்டார் என்றுராம் ஜேத்மலானி அறிக்கை வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்து பிரதமர் வாஜ்பாய் வெளியிட்ட அறிக்கை:
அரசு நிர்வாகத்தும் நீதித் துறைக்கும் இடையே நல்லுறவு நீடிக்க வேண்டும் மட்டுமல்ல வலுப்படவேண்டும் என்ற நோக்கில்தான் எனதுஅதிகாரத்தைப் பயன்படுத்தி ராம் ஜேத்மலானியை ராஜினாமா செய்யச் சொன்னேன்.
ராம் ஜேத்மலானிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அப் பிரச்சினைக்குள் செல்ல நான் விரும்பவில்லை.
அது சரியா தவறா என்ற ஆராய்ச்சிக்குப் பதில், அப் பிரச்சினையால் நிர்வாகத்துக்கும் நீதித் துறைக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் உருவாகிவிடக்கூடாது என்ற நோக்கில்தான் நான் அவ்வாறு செயல்பட்டேன்.
தனக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அட்டர்னி ஜெனரலுக்கும் இடையே உள்ள பிரச்சினை பற்றி ராம் ஜேத்மலானி அறிக்கைவெளியிட்டுள்ளார்.
அதைப் படித்த பிறகே இத்தகைய அறிக்கையை நான் வெளியிடுகிறேன். இது தொடர்பாக ராம் ஜேத்மலானியுடன் எதுவும் கலந்து பேசவில்லை.
என் மீதும், அரசு மீதும் ராம் ஜேத்மலானி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications