தமிழகத்தில் இன்று
தேயிலை விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்த நீலகிரி
கோவை:
தேயிலை விவசாயிகள் போராட்டத்தால், நீலகிரியில் ஏற்பட்டுள்ள பரபரப்பானசூழ்நிலையையடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.பஸ்கள் நிறுத்தப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகள் தேயிலை விலையை ரூ. 15 ஆகநிர்ணயம் செய்யக் கோரி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு மாதத்திற்கு முன்பு 5 பஸ்கள் எரிக்கப்பட்டன. இதனையடுத்து, அரசு குழுஒன்றை அமைத்து பிரச்னையை ஆராய்ந்தது. ஆனால், அரசு அடுத்த கட்ட நடவடிக்கைமேற்கொள்ளுமுன் மீண்டும் தேயிலை விவசாயிகள் பிரச்னை தொடங்கியுள்ளது.
குழுவின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி விவசாயிகள்,திடீர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
கடந்த 4 நாட்களாக நடந்து வரும் இப் போராட்டத்தால், நீலகிரியில் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழக சட்டம்ஒழுங்கு ஐ.ஜி.,சுப்பையா மற்றும் ஏ.டி.ஜி.பி, குமாரசாமி நீலகிரியில் முகாமிட்டனர்.
ஜூலை 27 ல் நடந்த போராட்டத்தில் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசினர்.தடியடி நடத்தப்பட்டது. இதில் பல பெண்கள் உட்பட விவசாயிகள் காயமடைந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும்கோவையில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நீலகிரியில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையால், பள்ளிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், குக்கிராமங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களும்நிறுத்தப்பட்டு விட்டது.
பெண்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை நீலகிரி தமிழ் மாநில காங்கிரஸ்கட்சி, மற்றும் அ.தி.மு.க. ஆகியவை கடுமையாக கண்டித்துள்ளன.
முதல்வர் கண்டனம்: சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால், தேயிலைவிவசாயிகள்போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது நலனைப் பாதுகாக்க அரசு தேவையானநடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தரமான தேயிலைக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும் என தொழிற்சாலைஉரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு ன்பு ரூ. 4க்கு விற்ற பச்சைத் தேயிலை, அரசு அறிவித்த சிலசலுகையால், தற்போது ரூ. 5.75 பைசாவாக உயர்ந்துள்ளது. தேயிலை விலையைமார்க்கெட் மட்டுமே தீர்மானிக்க முடியும் என முதல்வர் கருணாநிதி விடுத்துள்ளஅறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications