தமிழகத்தில் இன்று
மனைவியைத் தடுக்க விமானத்தை நிறுத்திய பலே கணவர்
டெல்லி:
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர், தன்னை விட்டுப் பிரிந்து செல்ல முயன்ற மனைவியைத் தடுக்க அவர் சென்ற விமானத்தை வதந்தியின் மூலம்நிறுத்தினார்.
இந்தக் குளறுபடி காரணமாக லண்டன் செல்ல வேண்டிய அந்த விமானம் சில மணிநேரங்கள் தாமதம் ஆனது. டெல்லியின் மாடல் ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவர்சூரத் பிரகாஷ் டுகால். இவர் அமெரிக்காவில் தொழில் செய்து வந்தார். இவர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு உள்ளது. டுகாலின் மனைவி சசி.இவர் லண்டனில் ஜவுளிதொழில் நடத்தி வருகிறார்.
சனிக்கிழமை மாலை சசி விர்ஜின் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதன்படி அவர் இந்திரா காந்தி விமான நிலையத்துக்குவந்தார். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த டுகால் தன் மனைவி சசியிடம் லண்டன் போக வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் கேட்காததால்அவரைத் தடுக்க முயன்றார். இதையெல்லாம் மீறி சசி விமானத்தில் ஏறி விட்டார்.
இதனால் கோபமுற்ற டுகால், விமானம் ஓடுபாதையிலிருந்து கிளம்ப முயன்ற போது, தொலை பேசி மூலம் லண்டன் செல்லும் விமானத்தில் பாதுகாப்புகுறைவாக இருப்பதாக விமானநிலைய அதிகாரிகளுக்கு கூறினார். இந்த வதந்தியை நம்பிய விமானஅதிகாரிகள் விமானத்தை நிறுத்தினர்.
தரையிறங்கிய விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் பாதுகாப்பில் எந்தக் குறையும் இல்லை என்று தெரிய வந்தது. மேலும் போனில்பேசியது டுகால் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது மனைவி சசியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வீடு திரும்பிய சசி ஞாயிற்றுக்கிழமைகாலை டெல்லியிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
வதந்தி கிளப்பி விட்டுவிட்டுத் தலைமறைவாகிவிட்ட டுகாலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications