தமிழகத்தில் இன்று
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னை:
காவிரிப் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைதீர்க்கக்கோரி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் கடற்கரைச் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக பாரிமுனை சந்திப்பிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை அதிமுகவினர்ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்துக்கு அதிமுக மகளிர் அணிச் செயலாளர் சுலோச்சனாசம்பத் தலைமை தாங்கினார்.
பிரச்சினைகளை வலியுறுத்தி அவற்றைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று ஊர்வலத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டவர்கள்கோஷமிட்டனர்.
முன்னாள் அமைச்சர் மதுசூதனன், ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர்கோதண்டராமன், பா. வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications