தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நள்ளிரவு 2.30 மணிக்கு முதல்வரை சந்தித்த ராஜ்குமாரின் குடும்பத்தினர்

சென்னை:

கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேர் கடத்தப்பட்டது குறித்து தமிழகமுதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காஜனூர் என்ற கிராமத்தில் உள்ள பண்ணைவீட்டுக்கு ராஜ்குமார், அவரது மனைவி பர்வதம்மா உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் அந்த வீட்டுக்கு தனது கூட்டாளிகளுடன்வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமார், அவரது மருமகன், மானேஜர்உள்பட 4 பேரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுவிட்டான்.

ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளை அங்கே விட்டுவிட்டு அவரிடம் ஒரு ஆடியோகேசட்டைக் கொடுத்தான். அந்த கேஸட்டை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுக்கும்படி கூறினான்.

மேலும், ராஜ்குமாரைக் கடத்தியது பற்றி கர்நாடக போலீஸாருக்கோ, தமிழகபோலீஸாருக்கோ தகவல் கொடுக்கக்கூடாது. அப்படி தகவல் கொடுத்தால்ராஜ்குமாரைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுவிடுவதாக மிரட்டிவிட்டுச்சென்றான்.

வீரப்பன் கொடுத்துச் சென்ற கேஸட்டை திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்குகர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கொடுத்தார் பர்வதம்மா.

அவர் உடனே தனது அதிகாரிகளைக் கலந்து பேசிவிட்டு தமிழக முதல்வருடன்ஆலோசனை நடத்துவதற்காக திங்கள்கிழமை காலை சென்னை வந்தார்.

அவருடன் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, நடிகரும்நாடாளுமன்ற உறுப்பினருமான அம்பரீஷ், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா,ராஜ்குமாரின் இரண்டாவது மகன் சிவராஜ்குமார், கர்நாடக மாநில தலைமைச் செயலர்,டிஜிபி ஆகியோர் வந்தனர்.

தலைமைச் செயலகம் வந்த அவர்களை முதல்வர் கருணாநிதி வரவேற்றார். பின்னர்இரு மாநில முதல்வர்களும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனைநடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக தலைமைச் செயலர்கள்,கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக அமைச்சர்கள் ஆர்க்காடுவீராசாமி, துரைமுருகன், ஆலடி அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரு மாநில முதல்வர்களும் இப் பிரச்சினையை எவ்வாறு கையாளுவது, வீரப்பனின்கோரிக்கையான தூதராக யாரை அனுப்புவது, ராஜ்குமாரையும் அவருடன்கடத்தப்பட்டவர்களையும் எவ்வாறு மீட்பது பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பிறகு இரு முதல்வர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+