தமிழகத்தில் இன்று
எட்டு வயதில் நடிக்க வந்த ராஜ்குமார்
பெங்களூர்:
எட்டு வயதிலேயே தனது நடிப்புலக வாழ்க்கையைத் துவக்கியவர் நடிகர் ராஜ்குமார்.
1929-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி மண்டியா மாவட்டம் காஜனூரில் பிறந்தவர் ராஜ்குமார். கடந்த 50 வருடங்களாக கன்னடத் திரையுலகின் முடி சூடாமன்னனாகத் திகழ்ந்து வரும் ராஜ்குமார் இதுவரை 220 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
ராஜ்குமாரின் முதல் படம் 1954-ல் வெளியான பேதார கண்ணப்பா. கன்னட மக்களின் குடும்ப உறுப்பினராகவே மதிக்கப்பட்டு வருவபர் ராஜ்குமார்.அவரை செல்லமாக அண்ணாவரே (அண்ணா) என்றுதான் அழைப்பர்.
புராணம், நகைச்சுவை, ஆக்ஷன், ரொமான்ஸ், டிராஜடி என அனைத்து வகையான வேடங்களிலும் ராஜ்குமார் நடித்துள்ளார். அவரது பங்காரத மனுஷ்யாஎன்ற படம் தொடர்ந்து 2 வருடங்கள் ஓடி கன்னட திரையுலக வரலாற்றில் இடம் பெற்றது.
நடிகராக மட்டுமல்லாது, நல்ல பாடகராகவும் திகழ்பவர் ராஜ்குமார். சம்பதிகே சவால் படத்திலிருந்து அவர் பாட ஆரம்பித்தார். தேசிய விருதும்பெற்றுள்ளார். ராஜ்குமாரின் பக்திப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
பத்ம பூஷன், டாக்டர், கர்நாடக ரத்னா, தாதா சாஹேப் பால்கே ஆகிய விருதுகளைப் பெற்று கன்னடத் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவை எல்லாவற்றையும் விட அவருக்குக் கிடைத்த இன்னொரு பட்டம் கன்னடத்து எம்.ஜி.ஆர்.












Click it and Unblock the Notifications