தமிழகத்தில் இன்று
மரியாதையாக நடந்து கொண்ட வீரப்பன்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டதாகவும், ஆனால் ராஜ்குமார் தனது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொள்ள வீரப்பன் கும்பல் அனுமதிக்கவில்லை என்றும் அவரது மனைவி பர்வதம்மா ராஜ்குமார் கூறியுள்ளார்.
வீரப்பன் கொடுத்தனுப்பிய ஆடியோ கேசட்டுடன் அதிகாலை 2 மணிக்கு பர்வதம்மா, பெங்களூர் வந்தார். முதல்வர் வீட்டில் அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், நாங்கள் புதிதாகக் கட்டியுள்ள பண்ணை இல்லத் திறப்பு விழாவுக்காக காஜனூர் சென்றிருந்தோம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், நாங்கள் 15 பேர் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது வீரப்பன் கும்பல் திடீரெனவீட்டுக்குள் புகுந்தது. வீரப்பனே கடத்தல் கும்பலுக்குத் தலைமை தாங்கி வந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் ராஜ்குமார் எங்கே என்று கேட்டது. நாங்கள் அப்படியே அதிர்ச்சியடைந்த நிலையில் இருதோம். அப்போது ராஜ்குமாரே,தான் வீரப்பனுடன் வந்து விடுவதாகவும், வீட்டிலுள்ளவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.
வீரப்பன் என்னிடம் ஆடியோ கேசட்டைக் கொடுத்தான். அவன் தமிழில் பேசினான். தமிழ் தெரியுமா என்று என்னிடம் கேட்டான். நான் ஆமாம்என்றான். முதலில் அக்கும்பல் அங்கிருந்த கோவிந்தராஜ், நாகப்பா ஆகியோரைப் பிடித்துக் கொண்டனர்.
மொத்தம் பத்தே நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது. வீட்டில் நிறைய நாய்கள் இருந்தும் கூட பெரிய மழை பெய்து கொண்டிருந்ததால், உதவிக்கும் யாரையும்அழைக்க முடியவில்லை.
வீரப்பன் கும்பல் எப்படி வந்தனர், எப்படிப் போனார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் வாகனம் இருந்ததா என்றும் தெரியவில்லை.
ராஜ்குமாரைப் பத்திரமாக மீட்பதற்கு அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக ராஜ்குமார் ரசிகர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். அவர்கள் அமைதிகாத்தால்தான் ராஜ்குமாரை பத்திரமாக மீட்க முடியும் என்றார் பர்வதம்மா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications