இந்த வாரம்
அடிவாங்கிய ஆடிட்டரை சாட்சி சொல்ல அனுமதிக்கக்கூடாது-ஜெ
சென்னை:
என் சொத்து பற்றி வழக்கில் சாட்சி சொல்ல ஆடிட்டர் ராஜசேரனுக்கு அனுமதி வழங்கக்கூடாதுஎன்று அ.தி.மு.க .பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசிஆகியோர் மீது முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ் வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு சில சாட்சிகளிடம் மட்டும் விசாரணைநடைபெற வேண்டியுள்ளது. அவர்களில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின்முன்னாள் ஆடிட்டர் ராஜசேகரன் ஆகியோரும் அடங்குவர்.
ஆகஸ்ட் 3-ம் தேதி சாட்சி சொல்ல வரும்படி இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சி சொல்ல ஆடிட்டர் ராஜசேகரனை அனுமதிக்கக்கூடாது என்றுகோரி ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மனு விவரம்:
சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் விதிமுறைகளின்படி ஒரு ஆடிட்டர் தன் வாடிக்கையாளருக்கு சமர்ப்பித்தஅறிக்கையை அந்த வாடிக்கையாளரின் சம்மதம் இல்லாமல் வெளியிடுவது குற்றமாகும்.
அத்தகைய குற்றத்தைச் செய்த ஆடிட்டர் ராஜசேகரனை சாட்சியம் அளிக்க அனுமதிக்கக்கூடாது என்றுமனுவில் ஜெயலலிதாவும், சசிகலாவும் கூறியுள்ளனர்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
சுப்பிரமணியம் சுவாமி வெளியூரில் இருப்பதால் வியாழக்கிழமை அவர் சாட்சியம் அளிக்கமாட்டார்என்றும் ஆகஸ்ட் 10-ம் தேதி அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளிப்பார் என்றும்கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications