இந்த வாரம்
அசார், ஜடேஜா வீட்டில் வருமான வரித்துறை சோதனை
டெல்லி :
வருமானவரித்துறை அதிகாரிகள் இந்தியக் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா மற்றும் முன்னாள் கேப்டன் அசாரூதினின் வீடுகளில் செவ்வாய்க்கிழமைஅதிரடி சோதனை நடத்தினர்.
வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு டைரக்டர் ஜெனரல் எஸ்.சி.பரிஜா இதுகுறித்துக் கூறுகையில்,
கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம்சுமத்தப்பட்ட அஜய் ஜடேஜா மற்றும் முன்னாள் கேப்டன் அசாரூதின் ஆகியோர் வீடுகளில்ஏற்கனவே கடந்த ஜூலை 20 ம் தேதி சோதனை நடந்தது.
வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அந்த சோதனை இன்னும் முடிவடையவில்லை. அந்தச் சோதனையின் போதும் குற்றம்சாட்டப்பட்ட இருவரும்வெளிநாடு சென்றிருந்தனர். அதனால் தற்போது இரண்டாவது முறையாக சோதனை நடந்தது.
ஒரே நேரத்தில் டெல்லியில் ஜடேஜா வீட்டிலும், ஹைதராபாத்தில் அசாரூதின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இருவருமே லண்டனில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விட்டு இப்போதுதான் இந்தியா திரும்பியுள்ளனர்.
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள அசாரூதினின் வீட்டுக்கு காலை 8.30 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். இந்தச் சோதனையின்போது அதிகாரிகள் அசாரூதீனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
அதற்குப்பின் அசாரின் மனைவியும் திரைப்பட நடிகையுமான சங்கீதா பிஜ்லானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதே போல் டெல்லியில் உள்ள கிரிக்கெட்வீரர் ஜடேஜாவின் வீட்டிலும் சோதனை நடந்தது என்றார் எஸ்.சி.பரிஜா.
முன்னதாக இந்தியா, ஸ்ரீலங்கா, தென்ஆப்பிரிக்கா நாடுகளுக்கிடையே நடந்த மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் ஹான்சிகுரோனே லஞ்சம் வாங்கி தோற்றதாக புகார் கூறினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர்.
ஹான்சி குரோனே தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும் சராமரிக் குற்றச்சாட்டுக்களைசுமத்தி வந்தார் பிரபாகர்.
குற்றம்சுமத்தப்பட்ட அனைவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 20 ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள், அசார், ஜடேஜா உள்பட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில்சோதனை நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை அசாரூதின் மற்றும் ஜடேஜா வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சோதனைகுறித்த இதர விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications