இந்த வாரம்
வீரப்பனுக்கு ராஜ்குமார் மனைவி ரேடியோ மூலம் வேண்டுகோள்
சென்னை:
என்னை உன் சகோதரியாக நினைத்து என கணவரை விடுதலை செய் என்று சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா ரேடியோமூலம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் காஜனூர் கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குவந்திருந்த ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் இரண்டுநாட்களுக்கு முன் கடத்திச் சென்றான்.
இதுவரை அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், வீரப்பனைச் சந்திக்கஅவனது கோரிக்கைப்படி நக்கீரன் கோபால் அரசுத் தூதராக அவனைச் சந்திக்ககாட்டுக்குள் விரைந்துள்ளார்.
இந் நிலையில், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, ரேடியோ மூலம் வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்தார். தமிழில் அவர் பேசினார்.
நான் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா பேசுகிறேன். என்னை உன்
சகோதரியாக நினைத்துக் கொள். என் கணவருக்கு சரியான நேரத்தில் மருந்துகள்கொடு.
என் கணவரை விரைவில் அனுப்பி வைத்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.அவர்களுக்கு மூட்டு வலி உள்ளது. அதை நினைத்தாவது அவரை விடுதலை செய்யவேண்டும்.
கணவரை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.எல்லோரையும் விரைவில் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறோம் என்றார் பர்வதம்மா.
அவரைத் தொடர்ந்து ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர
ராஜ்குமார், புனித் ராஜ்குமார், சகோதரர் வரதப்பா ஆகியோர் பேசினர்.
ராஜ்குமாரின் உடல் நிலை பற்றியும், மருந்துகள் பற்றியும் அவர்கள் கூறினர்.
சென்னை, திருச்சி, கோவை, பெங்களூர், மைசூரில் உள்ள வானொலி நிலையங்கள்மூலம் இச் செய்தி ஒலிபரப்பப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications