ஓயாத பயிற்சி : சாயாத முயற்சி
அமாவாசை நாளை தனக்குத் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
மிகத் துல்லியமாகத் திட்டம் போட்டு நடிகர் ராஜ்குமார் தங்கியிருந்த வீட்டைக் குறி வைத்து தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து நடிகர் ராஜ்குமாரைக் கடத்திகாட்டுக்குக் கொண்டு சென்று விட்டார்.
இந்தக் கடத்தலால் கொந்தளித்துப் போன கன்னட திரைப்பட உலகம் இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது குறித்து கன்னட நடிக, நடிகையர் தங்களது கருத்துக்களை இங்கே கூறுகிறார்கள்.
ரமேஷ் அர்விந்த்:
ராஜ்குமார் கடத்தப்பட்டத கேள்விப்பட்டவுடனே நாங்க ரொம்ப அதிர்ச்சியாகி விட்டோம். வீரப்பன் அவருக்கு எந்த டார்ச்சரும் கொடுக்காமவிட்டுடணும். அதுதான் எங்களோட பிரார்த்தனை.
ஸ்ருதி:
தாதாசாகிப் பால்கே, பத்மபூஷன்னு ஏகப்பட்ட அவார்டுகளை வாங்கிக் குவித்தவர் ராஜ்குமார். அவர் கடத்தப்பட்டது தெரிஞ்சதுமே திரைப்படம்தொடர்பான எல்லா நடவடிக்கைகளும் ஸ்தம்பித்தது. கிரஹப்பிரவேசம் பண்ணி புது வீட்டுக்கு அவர் போய் ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள அவர்கடத்தப்பட்டு விட்டார். இது ரொம்ப துர்திர்ஷ்டவசமானது.
பெரிய நடிகர் என்கிற பந்தா எதுவும் இல்லாம ரொம்ப கேஷூவலா பேசக்கூடியவர் அவர். அவரப்போய் வீரப்பன் ஏன் கடத்தினான்னு கோபம் வருது!அவர் எந்தப் பிரச்சனையும் இல்லாம திரும்பணும்.
ஜக்கேஷ்:
இது ரொம்ப அநியாம்ங்க. ராஜ்குமார் கடத்தப்பட்டு இன்னியோட நாலு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ரெண்டு கவர்ன்மென்ட்டும் சேர்ந்து உருப்படியாஎதுவும் செய்யல.
கவர்ன்மென்ட் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் அது, இதுன்னு பல போலீஸ் டீமை உருவாக்கினாலும் கூட அவர மீட்க முடியலையேன்னு ஆதங்கமா இருக்கு.
இதென்ன சினிமா சீன் மாதிரி இருக்கு. அவரோட உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டா நாங்க சும்மா இருக்க மாட்டோம்.
வினயா பிரசாத்:
இந்த விஷயம் கேள்விப்பட்டவுடனே கன்னட பிலிம் இன்டஸ்ட்ரியே ஷாக் ஆயிடுச்சி. இந்த கடத்தல் சம்பவத்த எங்களால ஜீரணிக்க முடியல.
அவர் கடைசியா நடிச்ச படம் சப்த வேதி. இன்னும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டியிருக்கு. ரெண்டு கவர்ன்மென்ட்டும் சேர்ந்து அவரை எந்த பாதிப்பும்இல்லாமல் மீட்க நடவடிக்கை எடுக்கணும்.
ஜெயந்தி மற்றும் பாரதி:
ஜெயந்தியும், பாரதியும் நடிகர் ராஜ்குமாருடன் சேர்ந்து பல படங்கள் நடித்திருக்கிறார்கள். ஜெயன் ரூ பாலே, பெல்லி மோடா, பங்காருத பஞ்சரா மற்றும்நம்ம சம்சாரா போன்ற பல படங்களில் இவர்கள் ராஜ்குமாருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜெயந்தி கூறுகையில்,
அவர் ரொம்ப அன்பா பழகக் கூடியவர், ஷூட்டிங் ஸ்பாட்ல குடும்பம் பற்றியெல்லாம் அன்பா விசாரிப்பார்.
சீனியர் ஆர்ட்டிஸ்ட்ங்கற ஈகோவெல்லாம் அவர்கிட்ட துளி கூட இல்ல. எரிச்சலே படமாட்டார். கோபமன்னா என்னன்னே தெரியாது. அவர்கிட்டதான் நான் நிதானம், பொறுமை எல்லாம் கத்துக்கிட்டேன். வீரப்பனை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்றார்.
பாரதி கூறுகையில்,
பணக்காரன்-ஏழை, தாழ்ந்த ஜாதி-உயர்ந்த ஜாதி, படிக்காதவன்-படித்தவன் என்ற பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டவர் ராஜ்குமார்.
உபேந்திரா:
ராஜ்குமார் படங்கள்னா எனக்கு உயிர். எங்களப் போல இளம் கலைஞர்களுக்கு அவர் தான் குரு, ஐ மீன் ஃபிரெணட், ஃபிலாஸபர், கைடு எல்லாம்அவர்தான்.
ஏதாவது செய்யுங்க ப்ளீஸ்! அவர எப்படியாவது மீட்டுட்டு வாங்க.
ராகவேந்திரா: (நடிகர் ராஜ்குமாரின் மகன்)
தயபிட்டு கலாட்டா மாடுபேடி... என்றார் கன்னடத்தில். யாரும் கலாட்டா செய்யாதீங்க. கலவரத்துல ஈடுபடாம கோவில்களுக்குப் போய் பூஜைபண்ணுங்க.
கண்டிப்பா அப்பா திரும்பி வந்துடுவார். அவருக்கு மூட்டிவலி இருக்கு. அவர் மூன்று வேளையும் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். சில மாத்திரைகள்அவரிடம் கொடுத்து விட்டுள்ளோம்.
இப்போ, அதுவும் காலியாகியிருக்கும். என்ன பண்றதுன்னு தெரியல.
அப்பா எந்தப் பிரச்சனையும் இல்லாம திரும்ப நீங்க எல்லாரும் உதவணும். குறிப்பா யாரும் எங்கேயும் பிரச்சனை பண்ணாதீங்க என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications