ஆக.16 முதல் இன்ஜினியரிங் கவுன்சலிங்
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2000-2001-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறதுஎன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 26-ம் தேதியே கவுன்சலிங் தொடங்குவதாக இருந்தது. ஆனால், தகவல் தொழில் நுட்பப் பாடப் பிரிவில் கூடுதல் இடங்களை ஒதுக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம் உள்ள தமிழகத்தில் உள்ள 106 பொறியியல் கல்வி நிலையங்கள் 12,722 இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளன. இது குறித்துஏ.ஐ.சி.டி.இ. கமிட்டிஆராய உள்ளது.
விண்ணப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் 6000 இடங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள கமிட்டி அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமிட்டியின்இறுதி அறிக்கை ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும்.
மேற்கண்ட 6000 இடங்களைக் கணக்கில் கொள்ளாமல் திட்டமிட்டபடி ஒற்றைச் சாளர முறையில் கவுன்சலிங் நடைபெற்றிருக்கும் பட்சத்தில் மாணவர்இட ஒதுக்கீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும்.
மேலும் திறமையான, தகுதியான மாணவர்கள், தகவல் தொழில்நுட்பக்கல்வியில் சேர இயலாமல் போயிருக்கும். இதைத் தவிர்க்கவே கவுன்சலிங் ஒத்தி வைக்கப்பட்டது.
மேற்கண்ட அனைத்தையும் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு ஒற்றைச் சாளர முறையில் ஆகஸ்ட் 16-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.
கவுன்சலிங் பற்றிய விரிவான, முழுமையான பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் விரைவில் அறிவிக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications