செருப்பு தயாரிப்பில் மோசடியா? இல்லை என்கிறது தமிழக அரசு
சென்னை:
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மதுரை பிரிவில் செருப்பு உற்பத்திப் பிரிவில் ரூ. 1.63 லட்சம் ஊழல்நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தவறு. ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மதுரையில் உள்ள செருப்பு தயாரிப்புப் பிரிவில் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ரூ.1.63 லட்சம்அளவுக்கு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஏதும் ஊழல்நடைபெறவில்லை.
தணிக்கையாளர்களும் ஊழலைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. காலணி தயாரிக்க அனுமதிக்கப்பட்டதற்குஅதிகமாக தோல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராயும்படி மட்டுமே தணிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, மதுரை மண்டல துணை இயக்குநரை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படிகோரப்பட்டது. அவரும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின்படி பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட ஆர்டர்களின்படி ரூ. 11.83 லட்சம் மதிப்புள்ளதோல் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் 200 ஜோடி காலணிகள் தயாரிக்க 420 சதுர அடி தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாரியத்தால்நிர்ணயிக்கப்பட்ட 430 சதுர அடிகள் அளவுக்குள்ளாகவே தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, கூடுதலாக தோல் பயன்படுத்தியாதால் ரூ.1.63 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்குகாட்டப்பட்டுள்ளதாக வெளியான பத்திரிக்கைச் செய்தி தவறானது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications