நடிகை ரோஜா வழக்கில் ஆக.7-ம் தேதி தீர்ப்பு
சென்னை:
நடிகை ரோஜாவுக்கு எதிராக சினிமா பைனான்சியர் குந்த் சந்த் போத்ராதொடுத்துள்ள வழக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சினிமா எடுப்பதற்காக ரோஜாவின் சகோதரர் குமாரசாமி ரெட்டி என்னிடம் ரூ.20லட்சம் கடன் வாங்கினார். அதற்கு ரோஜா உத்தரவாதம் அளித்தார்.பணத்தையும்வட்டியையும் திருப்பித் தராததால் இப்போது கடன் தொகை ரூ.42லட்சமாகஅதிகரித்துவிட்டது.
சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஜாவுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதிவிருதுவழங்கப்படவுள்ளது. அவருக்கு வழங்கப்படும் விருதையும்,பணமுடிப்பையும்முடக்கி வைக்கவேண்டும் என்று குந்த் சந்த் போத்ரா தனது மனுவில்கூறியிருந்தார்.
இம் மனு நீதிபதி ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. ரோஜா தரப்பில்வழக்கறிஞர் ராமானுஜம் வாதாடினார்.
சினிமா எடுக்க ரோஜாவின் சகோதரர்தான் போத்ராவிடம் கடன் வாங்கினார்.ரோஜாகடன் வாங்கவில்லை. அதுவும் ரூ.15 லட்சம் தான் கடன் கொடுத்துள்ளார்.ஆனால்,ரூ.20 லட்சம் கடன் கொடுத்ததாக போத்ரா கூறுகிறார். மேலும்,அந்த கடன் பத்திரத்தில்ரோஜாவின் போலியான கையெழுத்தை அவர்போட்டுள்ளார்.
லத்திசார்ஜ் என்ற படத்தின் நெகடிவ் உரிமை போத்ராவிடம் உள்ளது. அப்படத்தைவெளியிட்டால் ரூ.50 லட்சம் வரை கிடைக்கும். அதன் மூலம் தனதுகடன்தொகையை போத்ரா வசூலித்துக் கொள்ளலாம்.
திறமையின் அடிப்படையில் கிடைத்த சிறந்த நடிகை விருதை முடக்கக் கோருவதுதவறு என்றார் ராமானுஜம். பைனான்சியர் போத்ரா சார்பில் வழக்கறிஞர் சிராஜுதீன்வாதாடினார்.
தான் கடன் வாங்கியது உண்மை என்று ரோஜா ஏற்கெனவேநீதிமன்றத்தில்கூறியுள்ளார். இவ் வழக்குத் தொடர்பாக அசையும் சொத்துக்களைவிற்கமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.
இந்த கடன் தொகை வழக்கை அடுத்து ரோஜா நடித்த 13 படங்களின் சம்பளத்தைநீதிமன்றத்தில் கட்டும்படி ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. லத்திசார்ஜ்படத்தைவெளியிட செலவு அதிகமாகும். மேலும் இது டப்பிங் படம் என்பதால்அதிக விலைக்குப் போகாது.
மேலும், ரோஜாவுக்கு வழங்கப்படும் விருதை முடக்கவேண்டும் என்றுகூறவில்லை. தங்கப் பதக்கம் மற்றும் பணமுடிப்பை மட்டும் முடக்க வேண்டும்என்பதுதான் போத்ராவின் கோரிக்கை என்றார் சிராஜுதீன்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமமூர்தி, இவ் வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட்7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications