தேயிலை விவசாயிகளுக்காக கம்யூ. எம்.எல்.ஏ .க்கள் உண்ணாவிரதம்
கோவை:
நீலகிரி தேயிலை பிரச்சனையை விரைவாக தீர்க்கக் கோரி கோட்டை முன்புஉண்ணாவிரதம் இருக்கப் போவதாக கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தமூன்று எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழகஎம்.எல்.ஏ.க்கள் சுப்ரமணியன், பழனிச்சாமி மற்றும் பெரியசாமி ஆகியோர்வியாழக்கிழமையன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்,இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. ஆடைகள் அவிழ்க்கப்பட்டுஅவமானப்படுத்தப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல் நடந்துள்ளது.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டால் மாநில அரசும் போலீஸ் துறையுமேபொறுப்பேற்க வேண்டும். மேலும், இப்பிரச்சனையில் கைது செய்யப்பட்டஅனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
பச்சைத் தேயிலை கூட்டுப் போராட்டக் குழுவுடன் அரசு சுமூக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பச்சைத் தேயிலையை கிலோ 15 ரூபாய்க்கு அரசே கொள்முதல் ச்ெயதுகூட்டுறவு சங்கஙகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
நீலகிரி விவசாயிகள் மீது நடந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றநீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து நடவடிக்கை, விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
தேயிலை இறக்குமதியை நிறுத்தவேண்டும். தவறும் பட்சத்தில், மூன்றுஎம்.எல்.ஏ.க்களும் சென்னையில் கோட்டை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்வோம்என்று அவர்கள் பேட்டியில் கூறினர்.












Click it and Unblock the Notifications