ரூ. 3 லட்சம் திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 1600 திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் பெ. காளிமுத்து, நிருபர்களிடம்கூறியதாவது:
சமீபத்தில் வெளியான குஷி, பெண்ணின் மனதைத் தொட்டு உள்ளிட்ட படங்கள்மற்றும் விரைவில் வெளியாக உள்ள இன்டிபென்டன்ஸ் டே உள்ளிட்ட தமிழ் சினிமாபடங்களின் திருட்டு வீடியோ சி.டி.க்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை மாநகரம் முழுவதும் திடீர் சோதனைமேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ஒரு வீடியோ கேஸட் கடையில்1200 வீடியோ சி.டி.க்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக அந்த கடை உரிமையாளர் ராஜு கைது செய்யப்பட்டார்.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு வீடியோ கேஸட் கடையில் சோதனை நடத்தி 50திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர் ராஜன்கைதுசெய்யப்பட்டார்.
அதே பகுதியில் மற்றொரு கடையிலிருந்து 300 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடை உரிமையாளர் குமார் கைது செய்யப்பட்டார். புதுப்பேட்டையில் உள்ளஒருகடையிலிருந்து 50 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர் ரகுகைதுசெய்யப்பட்டார்.
சென்னை மாநகரம் ழுவதும் இத்தகைய சோதனை மேற்கொள்ளப்படும். திருட்டுசி.டி.க்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்காளிமுத்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications